Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 7)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

வைணவ குரு பரம்பரை

மூலம் - நாதமுனிகள் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்த முதலிகள் உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், நம்பி கருணாகரதாஸர், ஏறுதிருவிடையார், திருக்கண்ணமங்கையாண்டான், வானமாதேவியாண்டான், உருப்பட்டூராச்சான்பிள்ளை, சோகத்தூராழ்வான் என்பர். உய்யக்கொண்டார் ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர். அவர்களாகிறார் மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணிப் பாண்பெருமாளறயர், சேட்டலூர் செண்டலங்காரர், ஸ்ரீபுண்டரீகதாஸர், உலகப்பெருமாள்நங்கை. மணக்கால்நம்பி ஸ்ரீபாதத்தை ஆச்ரயித்தவர்கள் ஐவர். அவர்களாகிறார் ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன், சிறுப்புள்ளூர் ஆவுடையபிள்ளை, ஆச்சி.

நாதமுனிகளின் திருவடிகளை பற்றி நின்ற சிஷ்யர்கள் - உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், நம்பிகருணாகரதாஸர், ஏறு திருவுடையார், திருக்கண்ணமங்கை ஆண்டான், வானமாதேவி ஆண்டான், உருப்பட்டூர் ஆச்சான் பிள்ளை, சோகத்தூராழ்வான் ஆகிய எட்டு பேர்கள். உய்யக்கொண்டாரின் சிஷ்யர்கள் ஐவர் - மணக்கால்நம்பி, திருவல்லிக்கேணி பாண் பெருமாள் அரையர், சேட்டலூர் செண்டலங்காரர், ஸ்ரீ புண்டரீகதாஸர் மற்றும் உலகப்பெருமான் நங்கை ஆவர். மணக்கால் நம்பியின் திருவடிகளை அண்டி இருந்தவர்கள் ஐவர் - ஆளவந்தார், தெய்வத்துக்கரசு நம்பி, கோமடத்துத் திருவிண்ணகரப்பன், சிறுப்புள்ளுர் ஆவுடையப் பிள்ளை மற்றும் ஆச்சி ஆகியோர் ஆவர்.