Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 5)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
பகவானே முதல் ஆசார்யன்
மூலம் – “தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யம் பிதரம் குரும்” என்றும், “மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு:” என்றும், “த்வமேவ பந்துச்ச குருஸ் த்வமேவ” என்றும், “குருரஸி கதிச்ச அஸி ஜகதாம்” என்றும் சொல்லுகிறபடியே ஸர்வலோகத்துக்கும் பரமாசார்யனான ஸர்வேச்வரன் - (1) ப்ரஹ்மாவுக்கு அடியிலே வேதங்களைக் கொடுத்தும், (2) அவற்றிற்கு அபஹாரம் பிறந்தபோது மீட்டுக் கொடுத்தும், (3) இவன்முகமாக சாஸ்த்ரங்களை ப்ரவர்த்திப்பித்தும், (4) இவன் புத்ரர்களான ஸநத்குமாராதிகளை “ஸ்வயம் ஆகத விஜ்ஞாநா நிவ்ருத்திம் தர்மம் ஆஸ்திதா:” என்னும்படி பண்ணி அவர்கள் முகங்களாலே ஹித ப்ரவர்த்தனம் பண்ணுவித்தும், (5) இப்படியே மற்றும் நாரத பராசர சுக சௌனகாதிகளான பல மஹர்ஷிகளையிட்டு அத்யாத்ம ஸம்ப்ரதாயம் குலையாதபடி நடத்தியும், (6) “க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹி அந்யோ புவி மைத்ரேய மஹாபாரத க்ருத்பவேத்” என்றும், “மஹர்ஷே: கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம: ப்ராஞ்ஜலி: அப்ரவீத்” என்றும் சொல்லுகிறபடி நிற்கிற வ்யாஸாதிகளை அநுப்ரவேசித்து மஹாபாரத சாரீரகாதிகளை ப்ரவர்த்திப்பித்தும், (7) ஹம்ஸ மத்ஸ்ய ஹயக்ரீவ நரநாராயண கீதாசார்யாத் யவதாரங்களாலே தானே வெளினின்று தத்வ ஹித புருஷார்த்தங்களை ப்ரகாசிப்பித்தும், (8) தான் அருளிச் செய்த அர்த்தங்களை எல்லாம் ஸ்ரீபீஷ்மர் முதலான ஜ்ஞாநாதிகரையிட்டு மூதலிப்பித்தும், (9) “பஞ்சாராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம்” என்கிறபடியே அடியிலே தான் அருளிச்செய்த பகவச்சாஸ்த்ரத்தை “ப்ராம்மணை: க்ஷத்ரியை: வைச்யை: சூத்ரைச்ச க்ருதலக்ஷணை: | அர்ச்சனீயச்ச ஸேவ்யச்ச நித்ய யுக்தை: ஸ்வகர்மஸு || ஸாத்வதம் விதிமாஸ்தாய கீத ஸங்கர்ஷிணேன ய: | த்வாபரஸ்ய யுகஸ்யாந்தே ஆதௌ கலியுகஸ்ய ச” என்கிறபடியே அவஸரங்களில் ஆவிஷ்கரித்தும், (10) “பூர்வ உத்பந்நேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு: | அநுப்ரவிச்ய குருதே யத் ஸமீஹிதம் அச்யுத:” என்கிறபடியே பராங்குச பரகாலாதி ரூபத்தாலே அபிநவமாக ஒரு தசாவதாரம் பண்ணி, மேகங்கள் ஸமுத்ரஜலத்தை வாங்கி ஸர்வோபஜீவ்யமான தண்ணீராக உமிழுமாபோலே வேதார்த்தங்களில் வேண்டும் ஸாரதமாம்சத்தை ஸர்வருக்கும் அதிகரிக்கலான பாஷையாலே ஸங்க்ரஹித்துக் காட்டியும், (11) இப்படி தான் ப்ரவர்த்திப்பித்த ஸத் பதத்துக்கு ப்ரகடராயும் ப்ரச்சன்னராயுமிருந்துள்ள பாஷாண்டிகளால் உபரோதம் வாராமைக்காக, “ஸாக்ஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் | மக்நாந் உத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணினா” என்றும், “பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து” என்றும் சொல்லுகிறபடியே அகஸ்த்ய ஸேவிதமான தேசத்திலே அநேக தேசிகாபதேசத்தாலே அவதரித்தருளினான். இத்தைக் கணிசித்து, “கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் க்வசித் மஹாபாகா த்ரமிடேஷு ச பூரிச: || தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ | காவேரீ ச மஹாபாகா ப்ரதீசீ ச மகாநதீ” என்று மஹர்ஷி அருளிச்செய்தான்.
ஸர்வேச்வரனே அனைத்து உலகங்களுக்கும் பரமாச்சார்யன் என்பதைக் கீழே உள்ள வரிகளிலிருந்து உணரலாம்: மஹாபாரதம் ஸபாபர்வம் (41-21) - தம் இமம் ஸர்வஸம்பன்னம் ஆசார்யம் பிதரம் குரும் - அவனே (க்ருஷ்ணன்) ஆசார்யனும், தந்தையும் குருவும் ஆவான் ஸ்ரீவிஷ்ணுபுராணம் (5-1-14) - மம அபி அகில லோகாநாம் குருர் நாராயணோ குரு: - அனைத்து உலகங்களுக்கும் குருவான நாராயணன் எனக்கும் குரு ஆவான் ஸ்தோத்ரரத்னம் (60) - குரு: அஸி கதிச்ச அஸி ஜகதாம் - அனைத்து உலகங்களுக்கும் குருவாகவும், அவர்கள் சென்றடையும் இடமாகவும் இப்படிப்பட்ட ஸர்வேச்வரன் செய்த உபாயங்கள் பின்வருமாறு: 1) வேதங்களை முதலில் நான்முகனுக்கு அளித்தான் 2) அந்த வேதங்கள் தொலைந்தபோது அவற்றை மீட்டுக் கொடுத்தான் 3) நான்முகன் மூலமாகவே வேத ஞானத்தை உலகத்திற்கு அளித்தான் 4) நான்முகனின் புத்திரர்களான ஸனத் குமாரர்களை, மகாபாரதம் சாந்தி பர்வம் (349-71) - ஸ்வயம் ஆகத விஜ்ஞாநா நிவ்ருத்திம் தர்மம் ஆஸ்திதா: - தானாகவே விளைந்த ஞானம் கொண்டவர்கள் மற்றும் தர்மத்தைச் செய்பவர்கள் – என்பதற்கு ஏற்பச் செய்து, அவர்கள் மூலமாகவே உலகிற்கு ஏற்ற நன்மைகளை வெளிப்படுத்தினான் 5) உபநிஷத்துக்களின் நெறி மறையாதபடி நாரதர், பராசரர், சுகர், ஸெளனகர் ஆகியோர் மூலம் காப்பாற்றினான் 6) ஸ்ரீவிஷ்ணுபுராணம் (3-4-5) - க்ருஷ்ணத்வைபாயனம் வ்யாஸம் வித்தி நாராயணம் ப்ரபும் | கோ ஹி அந்யோ புவி மைத்ரேய மஹாபாரத க்ருத்பவேத் - க்ருஷ்ண த்வைபாயனர் என்று அழைக்கப்படும் வ்யாஸர் ஸ்ரீமநநாராயணனே ஆவார். மைத்ரேயரே! மஹாபாரதத்தை இயற்றுவதற்கு இந்த உலகில் வேறு யார் உள்ளனர்? – என்றும், மஹாபாரதம் ஆதிபர்வம் (114-40) - மஹர்ஷே: கீர்த்தனாத் தஸ்ய பீஷ்ம: ப்ராஞ்ஜலி: அப்ரவீத் - உயர்ந்த வ்யாஸரின் பெயரை மிகுந்த மரியாதையுடனும் கைகளைக் கட்டியபடியும் பீஷ்மர் கூறினார் – என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள வ்யாஸர் முதலானவர்களாக நாராயணன் தோன்றி மஹாபாரதம், ப்ரஹ்மஸூத்ரம் ஆகியவற்றைப் படைத்தான் 7) நாராயணனே ஹம்ஸமாகவும், மத்ஸ்யமாகவும், ஹயக்ரீவனாகவும், நரநாராயணனாகவும், கீதாசார்யனாகவும் அவதாரம் செய்து தத்துவங்களையும் மோக்ஷ உபாயங்களையும் அருளினான் 8) தான் அருளிய அனைத்தையும் பீஷ்மர் முதலான ஞானிகள் மூலம் வெளிப்படுத்தினான் 9) மஹாபாரதம் சாந்திபர்வம் (359-68) - பஞ்சாராத்ரஸ்ய க்ருத்ஸ்நஸ்ய வக்தா நாராயணஸ் ஸ்வயம் - நாராயணனே பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தை உரைத்தான் – என்பதற்கு ஏற்ப தான் உண்டாக்கிய அந்த சாஸ்த்ரம் மறைந்து விட்டபின், அவனே அதனை த்வாபரயுகத்தின் முடிவிலும் கலியுகத்தின் தொடக்கத்திலும் உபதேசித்தான். அதனை அந்தணர்கள், க்ஷத்ரியர்கள், வைச்யர்கள் மற்றும் சூத்ரர்கள் ஆகியோர் அவரவர்களுக்கு உரிய வழிகளில் பகவானுக்குத் தொண்டு செய்யும்படியாக, பாஞ்சராத்ரத்தை ஸங்கர்ஷணன் மூலமாக உபதேசித்தான். இவர்கள் தங்கள் ஆசார்யனிடம் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து கொண்டு அவனை ஆராதனம் செய்யும்படிச் செய்தான் 10) ஸ்ரீவிஷ்ணுதர்மம் (108-50) - பூர்வ உத்பந்நேஷு பூதேஷு தேஷு தேஷு கலௌ ப்ரபு: | அநுப்ரவிச்ய குருதே யத் ஸமீஹிதம் அச்யுத: - கலியுகத்தில் அச்சுதன் இந்த உலகில் பிறந்த உயர்ந்த மனிதர்களின் உள்ளே புகுந்து தனக்கு விருப்பமானவற்றைச் செய்கிறான் - என்பதற்கு ஏற்றபடி, அவன் பராங்குசன் (நம்மாழ்வார்), பரகாலன் (திருமங்கைமன்னன்) போன்ற பத்து அவதாரங்களை புதியதாக எடுத்தான். இப்படியாக அவன் செய்தது என்ன? மேகங்கள் கடலிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுத்து, அதனை அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமான மழையாகப் பொழிவதுபோல, அனைத்து வேதங்களின் கருத்துக்களையும் எடுத்து அனைவரும் எளிதாகப் படிக்கும் தமிழில் (நாலாயிரத்திவ்யப்பிரபந்தம்) அளித்தான் 11) இப்படியாகத் தான் ஏற்படுத்திய நற்பாதைக்கு “வெளிப்படையாக நாராயணனை மற்றவர்களோடு சமமாக நினைப்பவர்கள், வேதத்தின்படி நடக்காதவர்கள், நாராயணனைத் தாழ்வாகப் பேசுபவர்கள்” ஆகியோர் மூலம் எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதற்காக அவன் செய்தது என்ன? ஜயாக்ய ஸம்ஹிதை - ஸாக்ஷாத் நாராயணோ தேவ: க்ருத்வா மர்த்யமயீம் தநும் | மக்நாந் உத்தரதே லோகாந் காருண்யாச் சாஸ்த்ரபாணினா - அறியாமை என்னும் இருளில் மூழ்கிய இந்த உலகத்தை நாராயணன் தானாகவே தனது கருணை காரணமாக, சாஸ்த்ரங்கள் என்னும் கைகொடுத்து மேலே உயர்த்தினான் – என்றும், பெரியாழ்வார் திருமொழி (5-2-8) - பீதகவாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அகஸ்தியரின் இந்தப் பகுதியில் பல ஆசார்யர்களாக அவதரித்து அருளினான். இதனை ஸ்ரீமத்பாகவதத்தில் - கலௌ கலு பவிஷ்யந்தி நாராயண பராயணா: | க்வசித் க்வசித் மஹாபாகா த்ரமிடேஷு ச பூரிச: || தாம்ரபர்ணீ நதீ யத்ர க்ருதமாலா பயஸ்விநீ | காவேரீ ச மஹாபாகா ப்ரதீசீ ச மகாநதீ - கலியுகத்தில் நாராயணனின் அடியார்கள் உயர்ந்த பக்தியுடன் கூடியவர்களாக திராவிட நாட்டின் இங்குமங்குமாகப் பல இடங்களில் பிறப்பார்கள்; அவர்கள் தாமிரபரணி, வைகை, பாலாறு, காவேரி, மகாநதி ஆகிய நதிகள் ஓடும் இடங்களில் அவதரிப்பர் – என்று மஹரிஷி அருளிச்செய்தார்.