Srimad Rahasyatrayasaram - தனியன்கள் (Thaniyan 5)

தனியன்கள்

அவிஜ்ஞாதம் விஜாநதாம் விஜ்ஞாதம் அவிஜாநதாம் ரஹஸ்ய த்ரய ஸாராக்யாம் பரம் ப்ரஹ்மாஸ்து மே ஹ்ருதி

– “முழுமையாக அறிந்தோம்” என்று எண்ணுபவர்களால் அறியப்படாததும், “முழுமையாக அறியவில்லை” என்று எண்ணுபவர்களால் அறியப்பட்டதும் ஆகிய பரப்ரஹ்மம் போன்று, “ரஹஸ்ய த்ரய ஸாரம்” என்பதும் எனது இதயத்தில் எப்போதும் நிலைக்கட்டும்.