Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 4)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
ஆசார்யனே மோக்ஷ உபாயம்
மூலம் - பாபிஷ்ட: க்ஷத்ரபந்துச்ச புண்டரீகச்ச புண்யக்ருத் | ஆசார்யவத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவான் பவேத்” என்று ஆசார்யவத்தையே ஸர்வருக்கும் மோக்ஷகாரணமென்று அறுதியிட்டார்கள். முமுக்ஷுவுக்கு ஆசார்ய வம்சம் பகவானளவுஞ் செல்ல அநுஸந்திக்க வேண்டுமென்று ஓதப்பட்டது.
ஸ்ம்ருதிகளில் - பாபிஷ்ட: க்ஷத்ர பந்துஸ்ச புண்டரீகக்ஷ புண்யக்ருதா ஆசார்ய வத்தயா முக்தௌ தஸ்மாத் ஆசார்யவான் பவேத் - மிகவும் பாபியான க்ஷத்ரபந்துவும், மிகவும் புண்ணியம் செய்த புண்டரீகனும் மோக்ஷம் பெற்றனர்; எப்படியெனில் அவர்களின் ஆசார்யன் உதவியால் ஆகும் – என்று கூறப்பட்டது. ஆகவே, அனைவருக்கும் மோக்ஷம் கிட்டுவதன் வழி ஒரு ஆசார்யனைப் பெறுவதே ஆகும் என்று முடிவு செய்தனர். மோக்ஷத்தில் விருப்பம் உள்ளவன் தனது ஆசார்ய பரம்பரையை பகவான் வரை நீட்டிக்கவேண்டும்.