Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 3)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

இன்பத்தில் இறைஞ்சுதல் இல் இசையும் பேற்றில் இகழாத பல் உறவு இல் இராகம் மாற்றில் தன்பற்றில் வினை விலக்கில் தகவோக்கத்தில் தத்துவத்தை உணர்த்துதலில் தன்மையாக்கில் அன்பர்க்கே அவதரிக்கும் மாயன் நிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுரகவி தோன்றக் காட்டும் தொல்வழியே நல்வழிகள் துணிவார்க்கட்கே

இந்த உலகில் தனது அடியார்களுக்காக, அவர்களுக்கு அடைக்கலமாக, ஒர் ஆயனாக க்ருஷ்ணன் அவதரித்தான். அவன் தனது அடியார்கள் இந்த உலக விஷயங்களில் வைக்கும் பற்றுதலை தன் மீது வைக்கும்படியும், பாவங்களை விலக்கும்படியும், எல்லையற்ற இன்பத்தை உணரும்படியும், தத்துவங்களை விளங்கும் படியும் செய்வதற்கு க்ருஷ்ணன் தயாராக இருந்தான். இருந்தாலும் மதுரகவியாழ்வார், அறிந்துக்கொள்ளக் கடினமான வேதங்களை தமிழில் உரைத்த நம்மாழ்வாரின் திருவடிகளையே பற்றினார். ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபட இதுவே உறுதியான் பாதை என்று காண்பித்தார்.