Srimad Rahasyatrayasaram - தனியன்கள் (Thaniyan 3)
தனியன்கள்
சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான் பாரொன்றச் சொன்ன பழமொழியில் - ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு வானேறப் போமளவும் வாழ்வு
– இந்த உலகில் வசிப்பவர்கள், பரமபதம் செல்லும் காலம் முடிய வாழ்கின்ற வாழ்க்கைக்கு - சீரான குணங்கள் நிரம்பியவரும், தூப்புல் என்னும் இடத்தில் அவதரித்தவரும், திருவேங்கடமுடையானுடைய திருமணியின் அவதாரமானவரும் ஆகிய வேதாந்த தேசிகன், இந்த உலகில் உள்ளவர்கள் ஈடுபடும்படியாக அருளிச்செய்தவற்றில், ஏதேனும் ஒரு பகுதி மட்டுமே போதுமானதாகாதோ?