Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 2)

அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்

பொய்கைமுனி பூதத்தார் பேயாழ்வார் தண் பொருநல் வரும் குருகேசன் விட்டுசித்தன் துய்ய குலசேகரன் நம் பாணநாதன் தொண்டரடிப்பொடி மழிசை வந்த சோதி வையம் எலாம் மறை விளங்க வாள் வேல் ஏந்தும் மங்கையர்க்கோன் என்று இவர்கள் மகிழ்ந்து பாடும் செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே

புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான உபநிஷத்துக்களின் உண்மையான பொருள்களை நாம் ஆழ்வார்கள் அருளிச்செய்த இனிமையான தமிழ்ப் பாசுரங்கள் மூலம் தெளிவாகப் புரிந்து கொண்டோம். இத்தகைய ஆழ்வார்கள் - பொய்கைமுனி, பூதமுனி, பேயாழ்வார், மிகவும் குளிர்ந்த தாமிரபரணி ஆற்றின் கரையில் அவதரித்த நம்மாழ்வார் (குலசேகசன்), விட்டுசித்தன்(பெரியாழ்வார்), தூய மனதுடைய குலசேகரன், நம்முடைய திருப்பாணாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருமழிசையில் அவதரித்த திருமழிசை ஆழ்வார், இந்த உலகெங்கும் வேதங்களின் ஒளி வீசும்படியாக வாளும் வில்லும் ஏந்திய திருமங்கைமன்னன் - ஆகியோர் ஆவர்.