Srimad Rahasyatrayasaram - அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம் (பத்தி 1)
அதிகாரம் – 0 – ஸ்ரீ குருபரம்பராஸாரம்
குருப்ய: தத்குருப்யச்ச நமோவாகம் அதீமகே வ்ருணீமஹே ச தத்ர ஆத்யௌ தம்பதீ ஜகதாம் பதீ
எங்களுடைய ஆசார்யனின் பொருட்டும், அவர்களது ஆசார்யர்க்களின் பொருட்டும் “நம:” என்ற பதத்தை நாங்கள் அடிக்கடி கூறுகிறோம். மேலும் இந்த உலகின் அதிபதியாக உள்ள தம்பதிகளான ஸ்ரீமந்நாராயணனையும், மகாலக்ஷ்மியையும் நாங்கள் ப்ரார்த்திக்கிறோம்.