Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 198)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

அந்தர்யாமித்வமாவது, அந்த: ப்ரவிச்ய நியந்தாவாயிருக்கை.

ஆகவிப்படி விபவத்தை உபபாதித்தவனந்தரம் அந்தர்யாமித்வத்தை யுபபாதிக்கிறார் (அந்தர்யாமித்வமாவது) என்று தொடங்கி.

இப்படியாக விபவ அவதாரங்களைக் குறித்து விரிவாக உரைத்த பின்னர், அந்தர்யாமியாக உள்ள தன்மையை விரிவாக விளக்குகிறார்.

– அதாவது “ய ஆத்மாநமந்தரோ யமயதி”, “அந்த: ப்ரவிஷ்டச்சாஸ்தா ஜநாநாம்”, “சாஸ்தா விஷ்ணுரசேஷஸ்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித:” இத்யாதிகளில் சொல்லுகிறபடியே சேதநருடையவுள்ளே ப்ரவேசித்து ஸகல ப்ரவ்ருத்திகளுக்கும் நியந்தாவாயிருக்கை அந்தர்யாமித்வமாவதென்கை.

அதாவது, ப்ரு. (3-7-22) - ய ஆத்மாநம் அந்தரோ யமயதி – யார் ஆத்மாவின் உள்ளிருந்து நியமிக்கிறானோ – என்றும், தை. ஆர. (3-11) - அந்த: ப்ரவிஷ்ட: சாஸ்தா ஜநாநாம் – அனைவருக்கும் உள்ளே புகுந்து, அனைத்தையும் நியமித்தபடி - என்றும், ஸ்ரீவிபு. (4-1-17) - சாஸ்தா விஷ்ணு: அசேஷஸ்ய ஜகதோ யோ ஹ்ருதி ஸ்தித: - அனைத்து ஜகத்தின் இதயத்தில் உள்ள விஷ்ணு அனைத்தையும் நியமிக்கிறான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அனைத்து சேதநர்களுக்குள்ளும் புகுந்து, அவர்களுடைய அனைத்து விதமான செயல்களுக்கும் எஜமானனாக இருத்தல் என்பதே அந்தர்யாமி தன்மை ஆகிறது.