Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 197)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
அவைதன்னிலே, சாபம் வ்யாஜம் அவதாரம் ஐச்சமென்று பரிஹரித்தது.
அதுக்கு உத்தரமருளிச்செய்கிறார் (அவை தன்னிலே) என்று தொடங்கி.
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
அதாவது, “தபஸாராதிதோ தேவோ ஹ்யப்ரவீத் பக்தவத்ஸல:, லோகாநாம் ஸம்ப்ரியார்த்தம் து சாபம் தம் க்ருஹ்யமுக்தவாந்” என்று உத்தர ஸ்ரீராமாயணத்திலும், “ஸர்வாவர்த்தேஷு வை விஷ்ணோர் ஜநநம் ஸ்வேச்சயைவ து, ஜாகாஸ்த்ரச்சலேநைவ ஸ்வேச்சயா கமநம் ஹரே:, த்விஜ சாபச்சலேநைவம் அவதீர்ணோபி லீலயா” என்று லைங்கபுராணாதிகளிலும் சொல்லுகையாலே, ப்ருகு சாபாதிகளாலே பிறந்தானென்கிறவவை தன்னிலே, சாபம் வ்யாஜமாத்ரம், அவதாரம் இச்சா க்ருஹீதமென்று பரிஹரித்ததென்கை.
அதாவது, உத்தர இராமாயணத்தில் – தபஸாராதிதோ தேவோ ஹ்யப்ரவீத் பக்தவத்ஸல:, லோகாநாம் ஸம்ப்ரியார்த்தம் து சாபம் தம் க்ருஹ்யமுக்தவாந் - தவத்தின் மூலம் ஆராதிக்கப்படுபவனாகவும், அடியார்களுக்கு எளியவனாகவும் உள்ள அந்த தேவதேவன், “அந்தச் சாபமானது லோகங்களுடைய நன்மைக்காக நம்மால் ஏற்றுக் கொள்ளத்தக்கது”, என்றான் – என்றும், லைங்க புராணத்தில் - ஸர்வாவர்த்தேஷு வை விஷ்ணோர் ஜநநம் ஸ்வேச்சயைவ து, ஜாகாஸ்த்ரச்சலேநைவ ஸ்வேச்சயா கமநம் ஹரே:, த்விஜ சாபச்சலேநைவம் அவதீர்ணோபி லீலயா - மஹாவிஷ்ணுவின் அனைத்து அவதாரங்களும் அவனது விருப்பத்தால், சாபம் என்பது போன்றவற்றால் உண்டானாலும், விஷ்ணுவிற்கு ஒரு வேடனுடைய அம்பானது இந்த உலகிலிருந்து பரமபதம் திரும்புவதற்கு ஒரு காரணமாக மட்டுமே அமைகிறது - என்றும் கூறப்பட்டது. ஆலவே ப்ருகுவின் சாபத்தால் இராமனாகப் பிறந்தான் என்று கூறப்படும் கருத்துக்களில் உள்ள சாபம் என்பது, அவன் இந்த லோகத்தில் அவதாரம் செய்வதற்கு ஒரு வாய்ப்பாக உள்ள காரணம் மட்டுமே ஆகும். அவன் தனது விருப்பத்தால் மட்டுமே அவதாரங்களை எடுக்கிறான்.