Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 190)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
மநுஷ்யத்வம், திர்யக்த்வம், ஸ்தாவரத்வம் போலே, கௌணத்வமும் இச்சையாலே வந்தது; ஸ்வரூபேண அன்று.
– இனி, முக்க்ய விபவத்தோடு கௌண விபவத்துக்குண்டான ஸாம்ய வைஷம்யங்களை யருளிச்செய்கிறார் (மநுஷ்யத்வம்) என்று தொடங்கி.
அடுத்து, முக்கியமான விபவம் மற்றும் முக்கியம் அல்லாத விபவம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒப்புமை மற்றும் ஏற்றத்தாழ்வுகளை அருளிச்செய்கிறார்.
– அதாவது, “மதிச்சயா ஹி கௌணத்வம் மாநுஷ்யமிவசேச்சயா, ஸூகரத்வஞ்ச மத்ஸ்யத்வம் நாரஸிம்ஹத்வமேவச, யதாவா தண்டகாரண்யே குப்ஜாம்ரத்வம் மமேச்சயா, யதா வாஜிமுகத்வஞ்ச மம ஸங்கல்பதோ பவேத், ஸேநாபதே! மமேச்சாதோ கௌணத்வம் ந ச கர்மணா” என்கிறபடியே, ராமக்ருஷ்ணத்வாதியான மநுஷ்யத்வம், மத்ஸ்ய கூர்மத்வாதியான திர்யக்த்வம், குப்ஜாம்ரத்வமாகிற ஸ்தாவரத்வம் ஆகிறவிவை இச்சையாலேயானாப்போலே, ஆவேச ரூபமான கௌணத்வமும் இச்சையாலே வந்ததென்னுமாகாரமொக்கும். அப்ராக்ருதமாயிருந்துள்ள ஸ்வாஸாதாரண விக்ரஹத்தோடே வந்ததன்றென்கை. உபாத்த வசனங்கள் இச்சையாலே வந்ததென்கிற மாத்ரத்தைச் சொல்லிற்றேயாகிலும், கௌணத்வமாவது மநுஷ்யத்வாதிகள்போலே, அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்தானத்தை இதர ஸஜாதீயமாக்கிக் கொண்டு அவதரித்ததல்லாமையாலே ஸ்வரூபேண வந்ததன்றென்னுமிடமும் ஸித்தமிறே.
அதாவது, ஸ்ரீவிஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் – மத் இச்சயா ஹி கௌணத்வம் மாநுஷ்யம் இவ ச இச்சயா, ஸூகரத்வம் ச மத்ஸ்யத்வம் நாரஸிம்ஹத்வம் ஏவ ச, யதாவா தண்டகாரண்யே குப்ஜாம்ரத்வம் மம இச்சயா, யதா வாஜிமுகத்வம் ச மம ஸங்கல்பதோ பவேத், ஸேநாபதே! மம இச்சாதோ கௌணத்வம் ந ச கர்மணா - எனது இச்சையால் முக்கியம் அல்லாத விபவங்களும் ஏற்படுகின்றன. இராமன் என்பது போன்ற மனித வடிவில் உள்ள அவதாரங்கள் எனது இச்சையால் ஏற்பட்டன; இதே போன்று வராகம், மீன், நரசிம்ஹம், தண்டவனத்தில் குட்டையான மாமரம் போன்றவையும் எனது இச்சையால் ஏற்பட்டன; இது போன்றே குதிரை முகமாக எனது ஸங்கக்பத்தால் அவதரிக்கிறேன். ஸேநை நாதரே! ஆகவே முக்கியம் அல்லாத விபவங்களும் எனது விருப்பத்தால் அல்லவோ ஏற்பட்டன? கர்மங்கள் காரணமாக அல்ல – என்பதற்கு ஏற்ப, இராமன் மற்றும் க்ருஷ்ணன் என்பதான மனித அவதாரங்கள், மீன் மற்றும் பன்றி என்பது போன்ற விலங்கு வடிவங்கள், குட்டையான மாமரம் போன்ற தாவர வடிவங்கள் போன்ற பலவும் அவனுடைய விருப்பத்தால் ஏற்பட்டன; இவை போன்று ஆவேச ரூபமாக உள்ள முக்கியம் அல்லாத அவதாரம் அவனது இச்சையால் ஏற்பட்டன என்பது பொருந்தும். ஆனால் இவை அனைத்தும் இந்த உலகில் காண இயலாதபடியும், அவனுக்கே உரிய திருமேனி கொண்டபடியும் வந்தவை அல்ல. இதுவரை கூறுப்பட்ட கருத்துக்கள் பலவும், முக்கியம் அல்லாத விபவங்கள் அனைத்தும், அவனுடைய இச்சையால் ஏற்பட்டன என்பதை மட்டுமே கூறின; ஆனால், இவை அனைத்தும், மனித அவதாரம் என்பவை போன்று, இந்த உலகில் காணமுடியாத திருமேனி, மற்ற பிறவிகளுக்கு ஒற்றுமையாகக் காணலாம்படியாக வந்தவை அல்ல; ஆகவே இவை அனைத்தும் அவனுடைய ஸ்வரூபத்துடன் அவதரித்தவை அல்ல என்பது தேறுகிறது.