Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 188)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

அநிருத்தர், சக்தி தேஜஸ்ஸுக்ளிரண்டோடுங்கூடி ரக்ஷணத்துக்கும், தத்வ ஜ்ஞாந ப்ரதானத்துக்கும் கால ஸ்ருஷ்டிக்கும், மிச்ர ஸ்ருஷ்டிக்கும் கடவராயிருப்பர்.

– அநந்தரம், அநிருத்தர்படியை அருளிச்செய்கிறார் (அநிருத்தர்) என்று தொடங்கி.

அடுத்து அநிருத்தனுடைய விதத்தை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அநிருத்தர் “சக்தி தேஜஸ் ஸமுத்கர்ஷாத் அநிருத்த தநுர் ஹரே:” என்றும், “புருஷோபி மஹாத்யக்ஷ: பூர்ண ஷட்குண உச்யதே, சக்தி தேஜௌ குணௌ தஸ்ய ஸ்புடா கார்யவசாந் முநே” என்றும் சொல்லுகிறபடியே, ஸர்வகுணங்களும் உண்டாயிருக்கச் செய்தேயும், கார்யாநுகுணமான சக்தி தேஜஸ்ஸுக்களோடே கூடி “சக்த்யா ஜகதிதம் ஸர்வமநந்தாண்ட நிரந்தரம், பிபர்த்தி பாதி ச ஹரிர் மணிஸாநுரிவாணுகம், தேஜஸா நிகிலம் தத்வம் ஜ்ஞாபயத்யாத்மநோ முநே” என்கிறபடியே, ஜகத் ரக்ஷணத்துக்கும்; உஜ்ஜீவந ஹேதுவான தத்வ ஜ்ஞாந ப்ரதாநத்துக்கும்; த்ருடி முதலாக த்விபரார்த்த பர்யந்தமாக உண்டான கால ஸ்ருஷ்டிக்கும் “துரீயோயம் ஜகந்நாதோ ப்ரஹ்மாணமஸ்ருஜத் புந: முக பாஹூருபஜ் ஜாதோ ப்ரஹ்மண பரமேஷ்டிந:, சதுர்விதோ பூத ஸர்கஸ்தேந ஸ்ருஷ்டஸ் ஸ்வயம்புவா ப்ராஹ்மணாத்யாஸ் ததா வரணா ரஜ: ப்ராசுர்யதோ பவந், த்ரயீமார்கேஷு நிஷ்ணாதா: பலவாதே ரமந்திதே, தேவாதீநேவ மந்வாநா ந ச மாம் மேநிரே ஸ்வத:, தம: ப்ராயாஸ் த்விமே கேசித்மம நிந்தாம் ப்ரகுர்வதே, ஆராத்யஞ்ச நியந்தாரம் ந ஜாநந்த: பரஸ்பரம், ஸல்லாபம் குர்வதோ வ்யக்ர வேத வாதேஷு நிஷ்ட்டிதா:, மாம் ந ஜாநந்தி மோஹேந மயி பக்தி பராங்முகா:, ஸ்வர்காதிஷு ரமந்தயேதே அவஸாநே பதந்தி தே, காமத்மாநோ மஹாபாக ஜரா மரண யோகிந:, ப்லவந்த்யேதே த்விஜா மோஹாத் தேஹி ஸம்ஸார வர்த்மநி இத்யேஷ மிச்ர ஸர்கஸ்து கணேச தவ கீர்த்தித:” என்று விஷ்வக்ஸேந ஸம்ஹிதையிற் சொல்லுகிறபடியே, ப்ரஹ்மாவினுடைய முக பாஹூ ருப ஜாதராய், ப்ராஹ்மணாதி வர்ணராய், ரஜ ப்ரசுரராய், பூர்வபாகமார்க நிஷ்ணாதராய், பலவாதத்திலே ரமியா நிற்பராய், ஈசவரனையொழிய தேவாதிகளையே ஆராத்யராக நினைத்து அதிலே சிலர் தம: ப்ரசுரராய், பகவந் நிந்தையைப் பண்ணி ஆராத்யனாய் நியந்தாவாயிருக்கிற அவனையறியாமல் வ்யகரமான வேதவாதங்களிலே மநஸ்ஸை வைத்து ஒருவர்க்கொருவர் அவற்றை ஸல்லாபித்துக் கொண்டு, ஆகையாலே, பகவத் ஜ்ஞாந பக்திகளில் அந்வயமன்றிக்கே, ஸ்வர்காதிகளிலே ரமியா நின்றுகொண்டு, ஸ்வகர்ம பலாவஸாநத்திலே அத: பதிதது காம விஷயமான மநஸ்ஸையுடையராய் ஜரா மரணங்களையடைந்து, ஸம்ஸார மார்க காமிகளாய்த் திரியுமவர்களாகிற மிச்ர வர்க்கத்தினுடைய ஸ்ருஷ்டியையும் பண்ணக் கடவராயிருப்பரென்கை. (அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும். அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதநர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்கும்) என்று; ஸமஷ்டி ஸ்ருஷ்டியெல்லாம் அத்வாரகமாகவும், வ்யஷ்டி ஸ்ருஷ்டி எல்லாம் ஸத்வாரகமாகவும், இவர்தாம் கீழ் அருளிச்செய்கையாலும்; “இவ்வண்டத்திலே பத்தாத்ம ஸமஷ்டி பூதனான ப்ரஹ்மாவுக்கும், இதுக்குக் கீழ் ஸ்வஸங்கல்பத்தாலே எம்பெருமான்றானே ஸ்ருஷ்டித்தருளும். இதுக்குமேல் ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்தருளும்” என்று ஆச்சான்பிள்ளை யருளிச்செய்கையாலும்; வ்யஷ்டி ஸ்ருஷ்டியெல்லாம் ஸத்வாரகமாகவே கொள்ளவேண்டுமாகையாலே, ப்ரதயும்ந க்ருத்யமாகச் சொன்ன சுத்தவர்க ஸ்ருஷ்டி அத்வாரகம், அநிருத்த க்ருத்யமாகச் சொன்ன மிச்ரவர்க ஸ்ருஷ்டி ஸத்வாரகம் என்னவொண்ணாது. ஆகையால் சுத்தவர்க ஸ்ருஷ்டியும், மிச்ரவர்க ஸ்ருஷ்டியும் ஸத்வாரக ஸ்ருஷ்டிதன்னிலே, சேதநருடைய கர்ம விசேஷ ப்ரயுக்தமான ஸங்கல்ப விசேஷத்தாலேயாகக் கடவது. இந்த சுத்தவர்க ஸ்ருஷ்டியும், மிச்ரவர்க ஸ்ருஷ்டியும் எம்பெருமான்தானே அருளிச்செய்யக் கேட்டவநந்தரம், “பகவந் தேவதேவேச ஸர்வஜ்ஞ! பரமேச்வர! கிமேஷ பவிதா ஸ்ருஷ்டோ மிச்ரஸர்கோ ஜகத்பதே! சுத்த ஸ்ருஷ்டிம் விஹாயைஷாம் நிர்தய: புருஷோத்தம!” என்று ஸேநை முதலியார் கேட்க, “விஹாய சுத்த ஸரீகஞ்ச மிச்ரஸர்கஸ்ய காரணம் ச்ருணுஷ்வ கணநாத த்வம் தயாலுர் நிர்தயோ ந ச ஸர்வஜ்ஞோஹம் நஸந்தேஹஸ் ததாபி ச ஸ்ருஜாம்யஹம், அநாத்ய வித்யா ஸம்முஷ்டசேமுஷீகாந் நராநிஹ, வீக்ஷ்யாஜ்ஞாந ப்ரஸங்கம் து நிஷித்த கரணம் ததா, விஹிதாகரணஞ்சாபி வீக்ஷ்யைஷாமபராதகாந், மிச்ர ஸர்கம் கரோம்யேவ ப்ரஹ்மணா பரமேஷ்டிநா; ஏவம் ஸுக்ருதலேசேந சுத்தஸர்கம் கரோமி ச; மநு ப்ரமுக ஸர்கோ யச்சுத்த ஸர்கோ மயேரித: சுத்த ஸத்வ மயாஸ் ஸர்வே மத் பக்தி நிரதாஸ் ஸதா, மமார்ச்சந பராஸ் ஸர்வே மத்த்யாந பரிப்ரும்ஹிதா:, நமஸ்யந்தோ மஹாபாக மஹாத்மாநோ ஜிதேந்த்ரியா:; பக்த்யா பரமயா சைவ பரபத்த்யாவா மஹாமுநே, ப்ராப்யம் வைகுண்டமாஸாத்ய ந நிவர்த்தந்தி தேவ்யயா:, ஏவம் ஸர்வேஷு குர்வத்ஸூ மாநவேஷு முமுக்ஷுஷு ஸ்ருஷ்டிக்ஷயோ மஹாநாஸீத்நாரகீ பூஸ் த்ருணாவ்ருதா, இதி ஜ்ஞாத்வா மிச்ர ஸர்க க்ரியதே லீலயா மயா” என்று பகவான்தானே அருளிச்செய்கையாலே.

விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில், சக்தி தேஜஸ் ஸமுத்கர்ஷாத் அநிருத்த தநுர் ஹரே: - ஸ்ரீஹரியின் அநிருத்த திருமேனியானது சக்தி மற்றும் தேஜஸ் ஆகியவற்றை உயர்ந்து கொண்டதாகும் – என்றும், புருஷோபி மஹாத்யக்ஷ: பூர்ண ஷட்குண உச்யதே, சக்தி தேஜௌ குணௌ தஸ்ய ஸ்புடா கார்யவசாந் முநே - மிகவும் உயர்ந்த புருஷன், ஆறு குணங்களையும் பரிபூர்ணமாகக் கொண்டவனாக உள்ளான், அவற்றில் சக்தி மற்றும் தேஜஸ் ஆகிய இரண்டும் காரியங்களுக்கு உறுப்பாக உள்ளன - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அநிருத்தன் அனைத்து குணங்களுடன் கூடியவனாக உள்ளபோதிலும், கார்யத்திற்கு ஏற்றபடி உள்ள சக்தி மற்றும் தேஜஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளான். மேலும், சக்த்யா ஜகதிதம் ஸர்வமநந்தாண்ட நிரந்தரம், பிபர்த்தி பாதி ச ஹரிர் மணிஸாநுரிவாணுகம், தேஜஸா நிகிலம் தத்வம் ஜ்ஞாபயத்யாத்மநோ முநே - எல்லை இல்லாதபடி உள்ள அண்டங்களால் நெருக்கப்பட்டுள்ள இந்த லோகங்களை ஸ்ரீஹரியானவன், மாணிக்க மலையின் தாழ்வரையானது அணுவைத் தாங்குவது போன்று, அனைத்து தத்வங்களையும் காக்கிறான் - என்று கூறுவதற்கு ஏற்ப, ஜகத்தைக் காத்தல் மற்றும் ஜகத்தானது கரையேற அவசியமாக உள்ள தத்வஞானம் ஏற்படவும் காரணமாகவும், விநாடி தொடக்கமாக த்விபரார்த்தம் முடிய உள்ள காலத்தின் ஸ்ருஷ்டிக்குக் காரணமாகவும் உள்ளான், மேலும் விஷ்வஸேந ஸம்ஹிதையில் – துரீயோயம் ஜகந்நாதோ ப்ரஹ்மாணமஸ்ருஜத் புந: முக பாஹூருபஜ் ஜாதோ ப்ரஹ்மண பரமேஷ்டிந:, சதுர்விதோ பூத ஸர்கஸ்தேந ஸ்ருஷ்டஸ் ஸ்வயம்புவா ப்ராஹ்மணாத்யாஸ் ததா வரணா ரஜ: ப்ராசுர்யதோ பவந், த்ரயீமார்கேஷு நிஷ்ணாதா: பலவாதே ரமந்திதே, தேவாதீநேவ மந்வாநா ந ச மாம் மேநிரே ஸ்வத:, தம: ப்ராயாஸ் த்விமே கேசித்மம நிந்தாம் ப்ரகுர்வதே, ஆராத்யஞ்ச நியந்தாரம் ந ஜாநந்த: பரஸ்பரம், ஸல்லாபம் குர்வதோ வ்யக்ர வேத வாதேஷு நிஷ்ட்டிதா:, மாம் ந ஜாநந்தி மோஹேந மயி பக்தி பராங்முகா:, ஸ்வர்காதிஷு ரமந்தயேதே அவஸாநே பதந்தி தே, காமத்மாநோ மஹாபாக ஜரா மரண யோகிந:, ப்லவந்த்யேதே த்விஜா மோஹாத் தேஹி ஸம்ஸார வர்த்மநி இத்யேஷ மிச்ர ஸர்கஸ்து கணேச தவ கீர்த்தித: - நான்காவதாக உள்ள ஜகந்நாதனாகிய அநிருத்தன், மீண்டும் நான்முகனைப் படைத்தான். பரமேஷ்டி என்ற பெயர் கொண்ட அந்த நான்முகனுடை முகம், தோள், தொடை மற்றும் கால் ஆகியவற்றிலிருந்து அந்த நான்முகனால் நான்குவிதமான உயிர்கள் படைக்கப்பட்டன. அவர்கள் அந்தணர்கள் முதலான நால்வரும் ரஜோ குணம் மிக்கவர்களாக இருந்தனர். வேதமார்க்கங்களில் நிஷ்டை கொண்டவராகவும், இன்பம் என்ற பயனில் நாட்டம் கொண்டவர்களாகவும், இருந்தனர். யுகத்தின் முடிவில் அழியும் தன்மை கொண்ட தேவர்களை ஆராதித்து, என்னை எண்ணாமால் உள்ளனர். ஒரு சிலர், தாமஸ குணம் நிறைந்தவர்களாக, என்னைப் பகைக்கிறார்கள். ஆராதிக்கப்பட வேண்டியவனும், அனைத்தையும் ஆள்பவனும் ஆகிய என்னை அறியாமல் உள்ளனர். தங்களில் ஒருவரை ஒருவர் என்னை இழந்து பேசியபடியும், கொடிய மனம் கொண்டவர்களாக உள்ளனர். வேதவாக்கியங்களுக்கு நேரடியாக உள்ள பொருளை விடுத்து, அவசியம் அற்ற வாதங்களால் பொருள் உரைக்கிறார்கள். இவர்களுடைய அறியாமை காரணமாக என்னிடம் பக்தி இன்றி, ஸ்வர்கத்தில் இன்பம் விழைகிறார்கள். இப்படியாக அந்தணர்கள் காமத்தில் மனம் கொண்டவர்களாக, பிறப்பு மற்றும் இறப்பு என்பதை அடைந்து தங்களுடைய மயக்கத்தால் ஸம்ஸாரத்தில் உள்ளனர். இப்படியாக உள்ள பாபபுண்ணியம் கலந்த படைப்பு குறித்து, கணங்களின் நாதனாகிய உனக்கு உரைக்கப்பட்டது - என்று கூறப்பட்டபடி, நான்முகனுடைய “முகம், தோள் மற்றும் தொடை ஆகியவற்றில் பிறந்தவர்களாகவும், அந்தணன் முதலான வர்ணங்களில் உள்ளவராகவும், ரஜஸ் நிறைந்தவர்களாகவும், வேதத்தின் பூர்வ பாகமான கர்மத்தில் நாட்டம் உள்ளவர்களாகவும், பலனில் விருப்பம் கொண்டவராகவும், ஈச்வரனைத் தவிர உண்மையற்ற தேவர்களையே ஆராதிக்கத் தக்கவர்களாக எண்ணுபவர்களாகவும், ஒரு சிலர் தாமஸம் நிறைந்து பகவானை நிந்திப்பவராகவும், ஆராதிக்கத் தக்கவனும் அனைத்தையும் நியமிப்பவனாகவும் உள்ள அவனை அறியாமல் குதர்க்கமான வேத வாதங்களில் மனதை வைப்பவராகவும், ஒருவருக்கொருவர் அந்த வாதங்களில் சச்ச்சரவு செய்பவராகவும், இதன் விளைவாக பகவத் ஞானம் மற்றும் பக்தி இன்றி ஸ்வர்கம் போன்றவற்றை எண்ணுபவராகவும், ஸ்வர்கத்தின் பலனை அனுபவிக்கும் காலம் கழிந்த பின்னர் பூமியில் பிறந்து காம விஷயமாக மனம் கொண்டவராகவும், பிறப்பு மற்றும் இறப்பு என்பதை அடைந்து ஸம்ஸாரத்தில் எப்போதும் விருப்பம் கொண்டவராகவும் அலைகின்ற பாபம் மற்றும் புண்ணிய கர்மங்கள் கலந்து நிற்கும் ஸ்ருஷ்டியை அநிருத்தன் செய்கிறான். (அண்டத்தையும் அண்ட காரணங்களையும் தானே யுண்டாக்கும். அண்டத்துக்கு உட்பட்ட வஸ்துக்களை சேதநர்க்கு அந்தர்யாமியாய் நின்று உண்டாக்கும்) - தொகுத்ததாக உள்ள ஸூக்ஷ்ம ஸ்ருஷ்டி அனைத்தையும் அவன் தன் மூலமாகவும், தனித்தனியாக உள்ள ஸ்ருஷ்டிகள் அனைத்தையும் மற்றவர்கள் மூலமாகவும் நிகழ்த்துவதாக இவர் முன்பே உள்ள சூர்ணையில் அருளிச்செய்ததாலும்; “இவ்வண்டத்திலே பத்தாத்ம ஸமஷ்டி பூதனான ப்ரஹ்மாவுக்கும், இதுக்குக் கீழ் ஸ்வஸங்கல்பத்தாலே எம்பெருமான்றானே ஸ்ருஷ்டித்தருளும். இதுக்குமேல் ப்ரஹ்மாவுக்கு அந்தர்யாமியாய் நின்று ஸ்ருஷ்டித்தருளும் - இந்த அண்டத்தில் உள்ள பந்தப்பட்ட ஜீவாத்மாக்களின் தொகுத்த ஸ்ருஷ்டியாக உள்ள நான்முகனுக்குக் கீழே உள்ள அனைத்தையும் ஸர்வேச்வரன் தனது ஸங்கல்பத்தால் தானே ஸ்ருஷ்டிக்கிறான். நான்முகனுக்கு மேலே உள்ள அனைத்தையும் அவனுடைய அந்தர்யாமியாக நின்று படைக்கிறான்” என்று ஆச்சான்பிள்ளை அருளிச்செய்ததாலும்; தொகுத்த ஸ்ருஷ்டி மற்றும் தனியாக உள்ள ஸ்ருஷ்டிகளை மற்றவர்கள் மூலமாகவே செய்வதற்காகக் கொள்ள வேண்டும் என்பதை எடுத்துக்கொண்டு, “சுத்த வர்க்க படைப்பை ப்ரத்யும்நன் செய்கிறான், இது தன் மூலம் செய்யும் படைப்பாகும். பாப புண்ணியம் கலந்த படைப்பை அநிருத்தன் செய்கிறான், இது மற்றவர்கள் மூலம் செய்யும் படைப்பாகும்”, என்று கூற முடியாது. எனவே சுத்த வர்க்க ஸ்ருஷ்டி மற்றும் பாபபுண்ணியம் கலந்த வர்க்கத்தின் ஸ்ருஷ்டி ஆகிய இரண்டுமே ஆத்மாக்களின் கர்ம அடிப்படையில், ஸர்வேச்வரனுடைய ஸங்கல்பத்தால், மற்றவர்களால் செய்யப்படுவதை அறியவேண்டும். இப்படியாக சுத்த வர்க்க ஸ்ருஷ்டி மற்றும் பாப புண்ணியம் கலந்த ஸ்ருஷ்டி ஆகிய இரண்டையும் ஸர்வேச்வரன் தானே செய்வதாகக் கூறியதைக் கேட்ட பின்னர் ஸேனைமுதலியார், “பகவந் தேவதேவேச ஸர்வஜ்ஞ! பரமேச்வர! கிமேஷ பவிதா ஸ்ருஷ்டோ மிச்ரஸர்கோ ஜகத்பதே! சுத்த ஸ்ருஷ்டிம் விஹாயைஷாம் நிர்தய: புருஷோத்தம! - அனைத்து தேவர்களுக்கும் ஈசனே! பகவானே! அனைத்தும் அறிந்தவனே! பரமேச்வரனே! ஜகத்தின் பதியே! பாப புண்ணியம் இரண்டையும் கலந்த படைப்பு ஏன் செய்யப்பட்டது? தயை இன்றி இவற்றைச் செய்யாமல், சுத்த ஸ்ருஷ்டியாக ஏன் செய்யப்படவில்லை?”, என்றார். இதற்கு பகவான், “விஹாய சுத்த ஸரீகஞ்ச மிச்ரஸர்கஸ்ய காரணம் ச்ருணுஷ்வ கணநாத த்வம் தயாலுர் நிர்தயோ ந ச ஸர்வஜ்ஞோஹம் நஸந்தேஹஸ் ததாபி ச ஸ்ருஜாம்யஹம், அநாத்ய வித்யா ஸம்முஷ்டசேமுஷீகாந் நராநிஹ, வீக்ஷ்யாஜ்ஞாந ப்ரஸங்கம் து நிஷித்த கரணம் ததா, விஹிதாகரணஞ்சாபி வீக்ஷ்யைஷாமபராதகாந், மிச்ர ஸர்கம் கரோம்யேவ ப்ரஹ்மணா பரமேஷ்டிநா; ஏவம் ஸுக்ருதலேசேந சுத்தஸர்கம் கரோமி ச; மநு ப்ரமுக ஸர்கோ யச்சுத்த ஸர்கோ மயேரித: சுத்த ஸத்வ மயாஸ் ஸர்வே மத் பக்தி நிரதாஸ் ஸதா, மமார்ச்சந பராஸ் ஸர்வே மத்த்யாந பரிப்ரும்ஹிதா:, நமஸ்யந்தோ மஹாபாக மஹாத்மாநோ ஜிதேந்த்ரியா:; பக்த்யா பரமயா சைவ பரபத்த்யாவா மஹாமுநே, ப்ராப்யம் வைகுண்டமாஸாத்ய ந நிவர்த்தந்தி தேவ்யயா:, ஏவம் ஸர்வேஷு குர்வத்ஸூ மாநவேஷு முமுக்ஷுஷு ஸ்ருஷ்டிக்ஷயோ மஹாநாஸீத்நாரகீ பூஸ் த்ருணாவ்ருதா, இதி ஜ்ஞாத்வா மிச்ர ஸர்க க்ரியதே லீலயா மயா - நித்யஸூரிகள் முதலான கூட்டத்தின் நாதனே! சுத்த வர்க்கத்தின் ஸ்ருஷ்டி நீங்கலாக உள்ள பாப புண்ணியங்கள் கலந்த வர்க்கத்தின் ஸ்ருஷ்டி குறித்து நீ கேட்பாயாக. நான் தயை நிறைந்தவனே ஆவேன், கருணை இல்லாதவன் அல்லன். அனைத்தும் அறிந்தவன் ஆவேன். ஆயினும், எல்லையற்ற காலமாக அறியாமையால் அபகரிக்கப்பட்ட பொய்யான அறிவு கொண்ட இவர்களை நான் இங்கு படைக்கிறேன். இவர்களுக்கு இவ்விதம் அறியாமை ஏற்பட்டபடி உள்ளது; மேலும் சாஸ்த்ரங்களில் தடுக்கப்பட்டதைச் செய்தல் மற்றும் விதிக்கப்பட்டதைச் செய்யாமல் இருத்தல் என்பதாக உள்ளனர். இதனைப் பார்த்து நான், நான்முகன் மூலமாக பாப புண்ணியங்கள் கலந்த வர்க்க ஸ்ருஷ்டியைச் செய்கிறேன். புண்ணியங்களின் பயனாக உள்ள சுத்த வர்க்கத்தைப் படைக்கிறேன். மனு போன்றவர்களுடைய ஸ்ருஷ்டியானது, சுத்த வர்க்க ஸ்ருஷ்டி என்றாகிறது. அனைத்து மனிதர்களும் சுத்த ஸத்வ குணம் கொண்டவராகவும், எப்போதும் என்னிடம் பக்தி கொண்டவராகவும், என்னை ஆராதிப்பவராகவும், என்னையே த்யானித்தபடி உள்ளவராகவும், இந்த்ரியங்களை அடக்குபவராகவும் உள்ளபோது, பக்தி மூலமாகவோ ப்ரபத்தி மூலமாகவோ அல்லது பரபக்தி மூலமாகவோ அடையக் கூடியதான ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து, இந்த ஸம்ஸாரத்திற்கு மீண்டும் திரும்ப மாட்டனர். இவ்விதம் அனைவருக்கும் மோக்ஷத்தில் ஆசை ஏற்படும்படி, அவர்க்ளுடைய சம்மதம் இன்றி நான் செய்தால், இந்த உலகில் ஸ்ருஷ்டியின் விகிதம் மாறுபடும். நரகமானது, புல்லுக்குச் சமமாகிவிடும். இதனால்தான் நான் அவரவர்களுடைய வினைகளுக்கு ஏற்ப, எனது விளையாட்டின் காரணமாக, பாப புண்ணியம் கலந்த ஸ்ருஷ்டியைச் செய்கிறேன்”, என்று பகவான் அருளிச்செய்தான்.