Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 185)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

பரத்வத்தில் ஜ்ஞாநாதிகளாறும் பூர்ணமாயிருக்கும், வ்யூஹத்தில் இவ்விரண்டு குணம் ப்ரகடமாயிருக்கும்.

இந்த பரவ்யூஹங்களுக்குத் தன்னில் விசேஷமேது? என்ன, அருளிச் செய்கிறார் (பரத்வத்தில்) என்று தொடங்கி.

இப்படிப்பட்ட பரவாஸுதேவனுக்கும், மற்ற மூன்று வ்யூஹங்களுக்கும் உள்ள சிறப்பு என்ன என்பதை அருளிச்செய்கிறார்.

– அதாவது, “ஸம்பூர்ண ஷட்குணஸ் தேஷூ வாஸுதேவோ ஜகத்பதி:” என்றும், “பூர்ணஸ்திமித ஷாட்குண்யோ நிஸ்தரங்கார்ணவோபம:, ஷண்ணாம் யுகபதுந்மேஷாத்குணாநாம் ஸ்வ ப்ரசோதிதாத், அநந்த ஏவ பகவாந் வாஸுதேவஸ் ஸநாதந:” என்றும் சொல்லுகிறபடியே, வாஸுதேவ ரூபமான பரத்வத்தில் ஜ்ஞாந பல ஐச்வர்ய வீ்ர்ய சக்தி தேஜஸ்ஸுக்களாகிற ஆறு குணங்களும பரிபூர்ணமாயிருக்கும். ஸங்கர்ஷணாதி ரூபமான வ்யூஹத்தில், “தத்ர தத்ராவசிஷ்டம் யத் குணநாம் த்வியுகம் முநே, அநுவ்ருத்திம் பஜத்யேவ தத்ர தத்ர யதாததம்” என்கிறபடியே, அவசிஷ்டமான குணசதுஷ்டயமும் தத்ரதத்ராநுவ்ருத்தமாய் நிற்கச் செய்தேயும், அதிகரித்த காரியங்களுக்கு அநுகுணமான இவ்விரண்டு குணமே ப்ரகாசமாயிருக்குமெனகை. “குணை: ஷட்பிஸ் த்வேதை: ப்ரதமதா மூர்த்திஸ் தவ பபெள ததஸ் திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரிபிரபு: வ்யவஸ்த்தா யா சைஷா நநு வரத ஸாவிஷ்க்ருதிவசாத் பவாந் ஸர்வத்ரைவ த்வகணித மஹா மங்களகுண:” என்று, இது தன்னை ஆழ்வானருளிச் செய்தாறே.

அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை - ஸம்பூர்ண ஷட்குணஸ் தேஷூ வாஸுதேவோ ஜகத்பதி: - இந்த ஜகத்தின் பதியாகிய வாஸுதேவன், ஆறு குணங்களைப் பரிபூர்ணமாகக் கொண்டுள்ளான் - என்றும், பூர்ணஸ்திமித ஷாட்குண்யோ நிஸ்தரங்கார்ணவோபம:, ஷண்ணாம் யுகபதுந்மேஷாத்குணாநாம் ஸ்வ ப்ரசோதிதாத், அநந்த ஏவ பகவாந் வாஸுதேவஸ் ஸநாதந: – தனக்குள் எப்போதும் ப்ரகாசித்தபடி உள்ளதான ஆறு குணங்களும் ஒரே நேரத்தில் விரிந்தபடி உள்ளதால், அலையற்ற கடல் கலங்காமல் உள்ளது போன்று முழுமையான கலங்காத ஆறு குணங்கள் கொண்டவனாக பகவான் வாஸுதேவன் எப்போதும் உள்ளான் - என்றும் கூறுவதற்கு ஏற்ப, வாஸுதேவ ரூபமாக உள்ள பரத்வத்தில் “ஞானம், பலம், ஐச்வர்யம், வீர்யம், சக்தி, தேஜஸ்” ஆகிய ஆறு குணங்களும் பரிபூர்ணமாக உள்ளன. ஸங்கர்ஷணன் போன்ற மற்ற வ்யூஹங்களில் “தத்ர தத்ராவசிஷ்டம் யத் குணநாம் த்வியுகம் முநே, அநுவ்ருத்திம் பஜத்யேவ தத்ர தத்ர யதாததம் – அந்தந்த மூர்த்திகளிடம் அவரவர்களுக்குள்ள இரண்டு இரண்டு குணங்கள் மீறாமல் உள்ளன - என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு வ்யூஹத்திலும் இரண்டு குணங்கள் என்னும் அடிப்படையில், அந்தந்த வ்யூஹத்தின் முக்கியமான இரண்டு குணங்கள் மட்டும் அல்லாமல், மீதம் உள்ள நான்கு குணங்களும் காணப்பட்டாலும். அந்தந்த வ்யூஹத்தின் முதன்மையான இரண்டு குணங்கள் மட்டுமே ப்ரகாசமாக உள்ளன [அதாவது, ஸங்கர்ஷணனிடம் இரண்டு குணங்கள் மட்டுமே ப்ரதானமாக உள்ளன. ஆனாலும், மற்ற நான்கு குணங்களும் அவனிடம் பொருந்தி உள்ளன]. ஸ்ரீவரதராஜ ஸ்தவத்தில் (16) கூரத்தாழ்வான் - குணை: ஷட்பிஸ் த்வேதை: ப்ரதமதா மூர்த்திஸ் தவ பபெள ததஸ் திஸ்ரஸ் தேஷாம் த்ரியுக யுகளைர் ஹி த்ரிபிரபு: வ்யவஸ்த்தா யா சைஷா நநு வரத ஸாவிஷ்க்ருதிவசாத் பவாந் ஸர்வத்ரைவ த்வகணித மஹா மங்களகுண: - வரதா! உனது முதலாவதான பரவாஸுதேவ மூர்த்தியானது ஆறு குணங்களாலும் ப்ரகாசம் அடைந்தது; அதன் பின்னர் உள்ள மற்ற மூன்று வ்யூஹங்கள், அந்தந்த வ்யூஹங்களுக்கு ஏற்ப உள்ள இரண்டு குணங்களுடன் ப்ரகாசித்தன. ஆனால் நீ எப்போதும் எண்ணற்ற பெரிய மங்கள குணம் கொண்டவன் ஆவாய் அல்லவோ - என்றார்.