Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 184)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

வ்யூஹமாவது, ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரார்த்தமாகவும், ஸம்ஸாரி ஸம்ரக்ஷணார்த்தமாகவும், உபாஸகாநுக்ரஹார்த்தமாகவும், ஸங்கர்ஷண ப்ரத்யும்நாநிருத்த ரூபேண நிற்கும் நிலை.

அநந்தரம், வ்யூஹத்தை உபபாதிக்கிறார் (வ்யூஹமாவது) என்று தொடங்கி.

அடுத்து வ்யூஹத்தை விளக்குகிறார்.

– அதாவது, வ்யூஹத்துக்கு விநியோகம் லீலாவிபூதியிலேயாகையாலே, இவ்விபூதியினுடைய ஸ்ருஷ்டியென்ன ஸ்த்திதியென்ன ஸம்ஹாரமென்ன, இவற்றை நிர்வஹிக்கைக்காகவும், புபுக்ஷுக்களான ஸம்ஸாரிகளை அநிஷ்ட நிவ்ருத்த்யாதிகளைப் பண்ணி ரக்ஷிக்கைக்காகவும், முமுக்ஷுக்களாய் உபாஸிக்குமவர்களுக்கு ஸம்ஸார நிவ்ருத்தி பூர்வமாகத் தன்னை வந்து ப்ராபிகைக்கு உடலான அநுக்ரஹத்தைப் பண்ணுகைக்கு உடலாகைக்காகவும், ஸங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்தர்களாய்க் கொண்டு நிற்கும் நிலை, வ்யூஹமாவது என்கை. இதில், இன்ன வ்யூஹத்தாலே யின்னது செய்யுமென்னுமிடம், மேல் உபபாதநத்திலே கண்டு கொள்வது. “சதுர்விதஸ் ஸ பகவாந் முமுக்ஷுணாம் ஹிதாய வை, அந்யேஷாமபிலோகாநாம் ஸ்ருஷ்டி ஸ்த்தித்யந்த ஸித்தயே” என்றும், “ஆநந்த்யாத் தவஸேனாதே! வ்யூஹ ஆதயோ மயேரித:, அநாதி காமவச்யாநாம் ஸம்ஸாரே பத்தாமத:” என்று தொடங்கி, “உபாஸகாநுக்ரஹார்த்தம் ஜகதோ ரக்ஷணாய ச” என்றும், “ஆவிராஸீத் பகவத: பஞ்சாயுத பரிஷ்க்ருத:, ருக்மாபஸ்ஸோயமமஸ் ஸர்வ சாஸ்த்ரேஷு சப்தித:; ஸோயம் ப்ரத்யும்ந நாம்நாபூத் ததேகாந்த வபுர்தர:; ஸோயம் ஸங்கர்ஷணாக்கயோபூத் ததேகாந்த வபுர்தர:, இந்தர நீலப்ரதீகாச ஏஷ சாஸ்த்ரேஷு சப்தித:, ததோ நாம்நா அநிருத்தோயம் ஸ்வயமே வாபவந் முநே; ததேகாந்த வபுர்யுக்தஸ் தாதாத்விக கந ப்ரப:” என்றும் பகவச் சாஸ்த்ரத்திலே ஸ்ருஷட்யாதிகளும் ஸம்ஸாரி ஸம்ரக்ஷணமும் உபாஸக அநுக்ரஹமுமாகிற வ்யூஹ க்ருதயங்களும், ஸங்கர்ஷணாதி வ்யூஹங்களும் சொல்லப்பட்டதிறே. “சதுர்விதஸ் ஸ பகவாந்” என்கிறவிடத்தில், சதுர்விதமாகச் சொல்லிற்று வாஸுதேவரையும் கூட்டுகையாலே.

வ்யூஹத்தின் பயன் என்பது லீலாவிபூதியில் உள்ளது. இந்த உலகில் ஸ்ருஷ்டி, இருப்பு மற்றும் அழிவு ஆகியவற்றை நியமிப்பதற்காகவும்; இன்பங்களை அனுபவித்தபடி உள்ள ஸம்ஸாரிகளுடைய விருப்பம் அற்றவற்றை விலக்கி அவர்களைக் காப்பதற்காகவும்; மோக்ஷத்தில் விருப்பம் கொண்டவர்களாக உபாஸனை செய்பவர்களுக்கு ஸம்ஸாரத்தை முதலில் விலக்கி, அதன் பின்னர் அவர்கள் தன்னை வந்தடைவதற்கு ஏற்றபடியான அனுக்ரஹத்தைத் செய்ய ஏதுவாகவும்; ஸங்கர்ஷணன், ப்ரத்யும்நன், அநிருத்தன் என்பவர்களாக நிற்கும் நிலையே வ்யூஹம் ஆகும். இவற்றில் “இந்த வ்யூஹம் இந்தச் செயலைச் செய்யும்” என்பதை அடுத்து கூற உள்ள இடத்தில் அறியலாம். விஷ்வக்ஸேந ஸம்ஹிதையில் - சதுர்விதஸ் ஸ பகவாந் முமுக்ஷுணாம் ஹிதாய வை, அந்யேஷாமபிலோகாநாம் ஸ்ருஷ்டி ஸ்த்தித்யந்த ஸித்தயே - முமுக்ஷுக்களுடைய நன்மைக்காகவும், தன்னைக் காட்டிலும் வேறாக உள்ள லோகத்தின் ஸ்ருஷ்டி இருப்பு மற்றும் ஸம்ஹாரம் ஆகியவற்றுக்காகவும், பகவான் நான்கு விதமாக உள்ளான் - என்றும்; ஆநந்த்யாத் தவஸேனாதே! வ்யூஹ ஆதயோ மயேரித:, அநாதி காமவச்யாநாம் ஸம்ஸாரே பத்தாமத: - விஷ்வக்ஸேநரே! வ்யூஹம் குறித்து உமக்கு முதலில் கூறப்பட்டது. எல்லையற்ற காலமாகத் தொடர்ந்தபடி உள்ள கர்மத்திற்கு வசப்பட்டபடி இருக்கும் ஸம்ஸாரத்தில் நீடிப்பவர்களையும் – என்று தொடங்கி, உபாஸகாநுக்ரஹார்த்தம் ஜகதோ ரக்ஷணாய ச – உபாஸனை செய்தபடி உள்ளவர்களையும் காப்பதற்காக - என்றும்; ஆவிராஸீத் பகவத: பஞ்சாயுத பரிஷ்க்ருத:, ருக்மாபஸ்ஸோயமமஸ் ஸர்வ சாஸ்த்ரேஷு சப்தித:; ஸோயம் ப்ரத்யும்ந நாம்நாபூத் ததேகாந்த வபுர்தர:; ஸோயம் ஸங்கர்ஷணாக்கயோபூத் ததேகாந்த வபுர்தர:, இந்தர நீலப்ரதீகாச ஏஷ சாஸ்த்ரேஷு சப்தித:, ததோ நாம்நா அநிருத்தோயம் ஸ்வயமே வாபவந் முநே; ததேகாந்த வபுர்யுக்தஸ் தாதாத்விக கந ப்ரப: - வ்யூஹங்கள் என்னைப் போன்று ஒளி வீசியபடியும், குற்றங்கள் ஏதும் இல்லாமல், அனைத்து சாஸ்த்ரங்களிலும் கூறப்பட்டபடியும், ஐந்து ஆயுதம் கொண்டபடியும் கூறப்பட்டனர். பரவாஸுதேவனிடமிருந்து வெளிப்பட்ட ப்ரதியும்நன், அந்தத் திருநாமத்திற்கு ஏற்றபடி உள்ளான்; ப்ரத்யும்நனிடமிருந்து வெளிப்பட்ட ஸங்கர்ஷணன், இந்த்ர நீல நிறம் கொண்டபடி உள்ளான். ஸங்கர்ஷணனிடமிருந்து, மேகம் போன்று நிறம் கொண்ட அநிருத்தன் வெளிப்பட்டான் - என்றும் பாஞ்சராத்ர சாஸ்த்ரத்தில் ஸ்ருஷ்டி குறித்தும், ஸம்ஸாரிகளைக் காப்பது குறித்தும், உபாஸகர்களுக்கு அனுக்ரஹம் செய்வது குறித்தும் உள்ள வ்யூஹங்களுடைய செயல்பாடுகள் மற்றும் ஸங்கர்ஷணன் போன்று வ்யூஹங்கள் குறித்தும் உரைக்கப்பட்டது அல்லவோ? மேலே “சதுர்விதஸ் ஸ பகவான் – பகவான் நான்கு விதங்களில்” என்று கூறப்பட்ட இடத்தில், வாஸுதேவனையும் கூறியதாகக் கொள்க.