Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 181)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

விக்ரஹம்தான் ஸ்வரூப குணங்களிலுங் காட்டில் அத்யந்தாபிமதமாய், ஸ்வாநுரூபமாய், நித்யமாய், ஏகரூபமாய், சுத்தஸத்வாத்மகமாய், சேதந தேஹம்போலே ஜ்ஞானமயமான ஸ்வரூபத்தை மறைக்கையன்றிக்கே மாணிக்கச் செப்பிலே பொன்னையிட்டு வைத்தாப்போலேயிருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசகமாய், நிரவதிக தேஜோரூபமாய், ஸௌகுமார்யாதி கல்யாணகுணகண நிதியாய், யோகி த்யேயமாய், ஸகல ஜந மோஹநமாய், ஸமஸ்த போக வைராக்ய ஜநகமாய், நித்யமுக்தானுபாவ்யமாய், “வாசத்தடம்”போலே ஸகல தாப ஹரமாய், அநந்தாவதார கந்தமாய், ஸர்வ ரக்ஷகமாய், ஸர்வாபாச்ரயமாய், அஸ்த்ர பூஷண பூஷிதமாயிருக்கும்.

இனி இந்த விக்ரஹத்தினுடைய வைலக்ஷண்யத்தையொரு சூர்ணையாலே விஸ்தரேண உபபாதிக்கிறார் (விக்ரஹந்தான்) என்று தொடங்கி.

ஸர்வேச்வரனுடைய திருமேனியின் மேன்மையை ஒரு சூர்ணை மூலம் விரிவாக உரைக்கிறார்.

ஸ்வரூப குணங்களிலுங்காட்டில் அத்யந்த அபிமதமாகையாவது, ஆநந்தமயமான ஸ்வரூபமும் ஆநந்தாவஹமான குணங்களும் போலன்றியே நிரதிசயாநந்தா வஹமாயிருக்கையாலே, அவற்றிற் காட்டிலும் மிகவுமபிதமாயிருக்கை. “இச்சாக்ரு ஹீதாபிமதோரு தேஹ:” என்னக்கடவதிறே. (ஸ்வாநுரூபமாகை) ஆவது அநநுரூபமாயிருக்கச் செய்தேயும் அபிமதமாயிருக்குமவை போலன்றிக்கே தனக்கு அநுரூபமாயிருக்கை. (நித்யமாகை) ஆவது ஸ்வரூப குணங்களோபாதி அநாதி நிதநமா யிருக்கை. லோகத்தில் அவயவிகளுக்கு அநித்யத்வம் காண்கையாலே, இதுக்கும் அவயவித்வேந அநித்யத்வம் வாராதோ? என்னில்; வாராது. எங்குமொக்க அவயவ ஸம்பந்த மாத்ரமல்ல அநித்யத்வ ஹேது; அவயவ ஆரப்தத்வம். அவயவ ஸம்பந்த மாத்ரமே அநித்யத்வ ஹேதுவாமாகில் கரசரணாத்யவயவ ஸம்பந்தமுண்டான வாத்மாவுக்கும் விநாசம் வரவேணும்; இங்கு அப்படி அவயவாரப்தத்வத்தில் ப்ரமாணமில்லாமையாலே, இது கரசரணாத் யவயவ யோகியாகா நிற்கச் செய்தேயும் நித்யமாயேயிருக்கும் என்று, இப்படி விவரணத்திலே ஆச்சான்பிள்ளை அருளிச் செய்தாரிறே. (ஏகரூபமாகை) ஆவது, வ்ருத்தி க்ஷயாதி விகார ரஹிதமாயிருக்கை “ஸதைக ரூப ரூபாய” என்னக்கடவதிறே (சுத்தஸத்வாத்மகமாகை) ஆவது குணாந்தர ஸம்ஸர்கமில்லாத ஸத்வத்துக்கு ஆச்ரயமாயிருக்கிற அப்ராக்ருத த்ரவ்யமே வடிவாயிருக்கை. “ந தஸ்ய ப்ராக்ருதாமூர்த்தி:” என்னக் கடவதிறே. (சேதந தேஹம் போலே) இத்யாதி. (பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசகமாகை) ஆவது சுத்தஸத்வாத்மகமாகையாலே குணத்ரய ஆச்ரயமான சேதந தேஹம்போலே ஜ்ஞாநமயமாகையாலே; தேஜோரூபமான ஸ்வரூபத்தைப் புறந்தோற்றாதபடி மறைக்கையின்றிக்கே மாணிக்யத்தைச் செப்பாகச் சமைத்து அதிலே பொன்னையிட்டு வைத்தால் உள்ளிருக்கிற பொன்னை அது புறமபே நிழலெழும்படி தோற்றுவிக்குமாப் போலே “எண்ணும் பொன்னுருவாய்” என்கிறபடியே, ஸ்ப்ருஹணீயமாகையாலே, பொன்னுருவென்று சொல்லப்படுமதான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்குத் தான் ப்ரகாசகமாயிருக்கை. (நிரவதிக தேஜோ ரூபமாகை) ஆவது நித்ய முக்த விக்ரஹங்களும் இதுவும் ஏக ஜாதீய த்ரவ்யமாயிக்கச்செய்தே, ஏக ஜாதீய த்ரவ்யாத்மகமான கத்யோத சரீர தேஜஸ்ஸிற்காட்டில் ஆதித்ய சரீரத்திற்குண்டான தேஜோதிசயம் போலே இவை ஸாவதிக தேஜஸ்ஸாம்படி தான் நிரவதிக தேஜஸ்ஸை வடிவாகவுடைத்தாயிருக்கை. (ஸௌகுமார்யாதி கல்யாணகுண கண நிதியாகை) ஆவது ஸௌகுமார்யம், ஸௌந்தர்யம், லாவண்யம், ஸௌகந்த்யம், யௌவனம் முதலான கல்யாண குண ஸமூஹத்துக்குக் கொள்கலமாயிருக்கை. “ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாத்யநந்த குண நிதி திவ்ய ரூப” என்று எம்பெருமானாரருளிச் செய்தாரிறே. (யோகி த்யேயமாகை) ஆவது பகவத் த்யாந பரரான பரமயோகிகளுக்கு சுபாச்ரயமாய்க் கொண்டு எப்போதும் த்யாந விஷயமாயிருக்கை. “காசாந்யா த்வாம்ருதே தேவி ஸர்வ யஜ்ஞ மயம் வபு: அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத:” என்று அஸாதாரண விக்ரஹமே யோகி சிந்த்யமாகச் சொல்லப்பட்டதிறே. (ஸகல ஜந மோஹநமாகை) ஆவது ஜ்ஞாநாஜ்ஞாந விபாகமற ஸகல ஜநங்களையும் ஸ்வ வைலக்ஷ்ணயத்தாலே பிச்சேற்றுமதாயிருக்கை. “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்”, “ஸர்வ ஸத்வம் நோஹர:”, “கண்டவர்தம் மனம் வழங்கும்” என்னக்கடவதிறே. (ஸமஸ்த போக வைராக்ய ஜநகமாகை) ஆவது, தன் வைலக்ஷண்யத்தைக் கண்டவர்களுக்கு ஸ்வேதர ஸகல விஷயாநுபவத்திலும் ஆசையறுதியை விளைக்கு மதாயிருக்கை; “பேரின்பமெல்லாம் துறந்தார் தொழுதாரத்தோள்” என்னக்கடவதிறே. (நித்ய முக்த அநுபாவ்யமாகை) ஆவது, அபரிச்சிந்ந ஜ்ஞாநாதி குணகரான நித்யராலும் முக்தராலும் “ஸதா பச்யந்தி”ப்படியே அநவரதம் அநுபவிக்கப்படுமதாயிருக்கை. (வாசத் தடம் போலே ஸகல தாபஹரமாகை) ஆவது, “கண் கை கால் தூய செய்யமலர்களா” என்று தொடங்கி ஆழ்வார் வர்ணித்தபடியே திவ்ய அவயவங்களும் திருமேனியுமான சேர்த்தியாலே, பரப்பு மாறத் தாமரை பூத்துப் பரிமளம் அலையெறியா நிற்பதொரு தடாகம் போலேயிருக்கையாலே, தன்னைக் கிட்டினவர்களுடைய ஸாம்ஸாரிக விவித தாபத்தோடு விரஹ தாபத்தோடு வாசியற ஸகல தாபத்தையும போக்குமதாயிருக்கை. (அநந்தாவதார கந்தமாகை) ஆவது, “அஜாயமாநோ பஹுதா விஜாயதே”, “பஹூநி மே வ்யதீதாநி” என்று சொல்லப்படுகிற அஸங்க்யாதமான அவதாரங்களும் அப்ராக்ருத திவ்ய ஸம்ஸ்த்தாநத்தை இதர ஸஜாதீயமாக்கிக் கொண்டு தீபாநுத்பந்ந ப்ரதீபம் போலே வருகிறவையாகையாலே அவையெல்லாவற்றுக்கும் மூலமாயிருக்கை, “ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்ட்டாய ஸம்பவாமி”, “கல்பே கல்பே ஜாயமாநஸ ஸ்வமூர்த்யா”, “ஆதியஞ் சோதியுருவையங்கு வைத்திங்குப் பிறந்த” என்னக்கடவதிறே. (ஸர்வ ரக்ஷகமாகை) ஆவது, ஐச்வார்யார்த்திகளோடு கேவலரோடு பகவச்சரணார்த்திகளில் உபாஸகரோடு, ப்ரபந்நரோடு அநுபவ கைங்கர்ய பரரான நித்ய முக்தரோடு வாசியற ஸர்வருடையவும் அநிஷ்ட நிவ்ருத்தி, இஷ்ட ப்ராப்திகளைப் பண்ணுவது திவ்யமங்கள விக்ரஹோபேதனாய்க் கொண்டாகையாலே, எல்லாருக்கும் ரக்ஷகமாயிருக்கை. (ஸர்வாச்ரயமாகை ) ஆவது, உபய விபூதிக்கும் ஆச்ரமாயிருக்கை. (அஸ்த்ர பூஷண பூஷிதமாகை) ஆவது, கீழ்ச் சொன்ன ஸர்வாச்ரயத்வ ஸூசகமாம்படி அஸ்த்ர பூஷணாத்யாயத்திற் சொல்லுகிறபடியே, விபூத்யபிமாநிகளான திவ்யாயுதங்களாலும் திவ்யாபரணங்களாலும் அலங்க்ருதமாயிருக்கை. “ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபமகுணாமலம், பிபர்த்தி கௌஸ்துபமணிம் ஸ்வரூபம் பகவாந் ஹரி: ஸ்ரீவத்ஸ ஸம்ஸ்த்தாநதரமநந்தேச ஸமாச்ரிதம், ப்ரதாநம் புத்திரப்யாஸ்தே கதாரூபேண மாதவே, பூதாதிமிந்த்ரியாதிஞ்ச த்விதாஹங்காரமீச்வர: பிபர்த்தி சங்க்க ரூபேண சார்ங்க ரூபேண ச ஸ்த்திதம், சல ஸ்வரூப மத்யந்த ஜவேநாந்தரிதா நிலம் சக்ர ஸ்வரூபஞ்ச மநோ தத்தே விஷ்ணு: கரேஸ்த்திதம், பஞ்சரூபாது யாமாலா வைஜயந்தீ கதாப்ருத: ஸா பூதஹேது ஸங்காதோ பூத மாலாச வை த்விஜ, யாநீந்த்ரிய விசேஷாணி புத்தி கர்மாத்மகாநிவை சர ரூபாண்ய சேஷாணிதாநி தத்தே ஜநார்தந: பிபர்த்தி யச்சாஸிரத்நம் அச்யுதோதயந்த நிர்மலம், வித்யாமயந்து தத் ஜ்ஞாநம் வித்யாச மம ஸம்ஸ்த்திதம்” என்னக் கடவதிறே.

திருமேனியானது, ஸ்வரூபம் மற்றும் குணங்கள் ஆகியவற்றைக் காட்டிலும் மிகவும் விரும்பக்கூடியதாக உள்ளது என்பது ஏன்? திருமேனியானது, ஆனந்தமயமான ஸ்வரூபம் மற்றும் ஆனந்தத்தை அளிக்கவல்ல குணங்கள் போன்று அல்லாமல், எல்லையற்ற ஆனந்தமயமாக உள்ளதால், அவற்றைக் காட்டிலும் விரும்பத்தக்கதாக உள்ளது. ஸ்ரீவிபு. (6-5-84) – இச்சாக்ரு ஹீதாபிமதோரு தேஹ: - தனது விருப்பத்தால் எடுத்துக்கொண்ட திருமேனி - என்பது காண்க. (ஸ்வாநுரூபமாக இருத்தல்) - ஒரு சிலருடைய சரீரமானது ஏற்கத்தகாததாக உள்ளபோதிலும், விரும்பத்தக்கதாகவே இருக்கும். இவை போன்று அல்லாமல் இவனுடைய திருமேனியானது ஏற்கத்தக்கதாகவும் உள்ளது. (நித்யமாக இருத்தல்) - அதாவது அவனுடைய ஸ்வரூபம் மற்றும் குணங்கள் போன்று தொடக்கம் மற்றும் முடிவு அற்றதாக, எப்போதும் இருப்பதாகும், ஆனால் இந்த உலகில் உடல் உறுப்புகளுடன் கூடிய சரீரங்களுக்கு “எப்போதும் உள்ள நிலை” என்பது காணப்படுவதில்லை; இதே போன்று ஸர்வேச்வரனுடைய திருமேனியும், உடல் உறுப்புகளுடன் கூடியதாக உள்ளதால் “நித்யம் அல்லாத தன்மை” என்பது ஏற்படாதோ என்றால், “ஏற்படாது” என்கிறார். தத்வத்ரய விவரணத்தில் ஆச்சான்பிள்ளை, “எங்குமொக்க அவயவ ஸம்பந்த மாத்ரமல்ல அநித்யத்வ ஹேது; அவயவ ஆரப்தத்வம். அவயவ ஸம்பந்த மாத்ரமே அநித்யத்வ ஹேதுவாமாகில் கரசரணாத்யவயவ ஸம்பந்தமுண்டான வாத்மாவுக்கும் விநாசம் வரவேணும்; இங்கு அப்படி அவயவாரப்தத்வத்தில் ப்ரமாணமில்லாமையாலே, இது கரசரணாத் யவயவ யோகியாகா நிற்கச் செய்தேயும் நித்யமாயேயிருக்கும் – உடல் உறுப்புக்களுடைய ஸம்பந்தமானது, எப்போதும் ஒரே போன்று, நித்யம் அல்லாத தன்மைக்குக் காரணமாக இருப்பதில்லை. சரீர ஸம்பந்தம் மட்டுமே அழிவின் காரணம் என்றால், சரீர ஸம்பந்தம் கொண்ட ஆத்மாவிற்கும் அழிவு ஏற்படவேண்டும். ஸர்வேச்வரனுடைய திருமேனியானது, உடல் உறுப்புகளுடன் ஸம்பந்தம் கொண்டது என்று கூறுவதற்கு ப்ரமாணம் இல்லை. ஆகவே அவனுடைய திருமேனியானது கை மற்றும் கால் ஆகியவற்றுடன் கூடியதாக உள்ளபோதிலும், எப்போதும் இருப்பதாகவே உள்ளது” என்று அருளிச்செய்கிறார். (ஏக ரூபமாக இருத்தல்) – வளர்த்தல் மற்றும் தேய்தல் என்பது போன்று மாற்றங்கள் இல்லாமல் உள்ளது. “ஸதைக ரூப ரூபாய - ஒரே போன்று உள்ள ரூபம்” என்று கூறியது காண்க. (சுத்த ஸத்வாத்மகம்) - ஸத்வம் அல்லாத மற்ற குணங்களாகிய ரஜஸ் மற்றும் தமஸ் ஆகியவற்றின் ஸம்பந்தம் இல்லாத ஸத்வத்திற்கு இருப்பிடமாக உள்ளதும், இந்த உலகில் காணப்படாத த்ரவ்யமாக உள்ளதும் ஆகிய வடிவமாக இருத்தல். மஹாபாரதம் - “ந தஸ்ய ப்ராக்ருதாமூர்த்தி: - இந்த உலகில் காணப்படாத திருமேனி - என்பது காண்க. (சேதந தேஹம்போலே ஜ்ஞானமயமான ஸ்வரூபத்தை மறைக்கையன்றிக்கே மாணிக்கச் செப்பிலே பொன்னையிட்டு வைத்தாப்போலேயிருக்க பொன்னுருவான திவ்யாத்ம ஸ்வரூபத்துக்கு ப்ரகாசகமாக இருத்தல்) - மூன்று குணங்களுக்கு இருப்பிடமாக உள்ளதான சேதநர்களுடைய சரீரம் போன்று ஞானமயமான உள்ளபோதிலும், சுத்த ஸத்வமயமாக உள்ளதால், தேஜோ ரூபமாக உள்ள தனது ஸ்வரூபத்தை வெளியில் காண்பிக்காமல் மறைத்தல் என்பது செய்யாமல், மாணிக்கத்தைச் செப்பாகச் சமைத்து அதில் தங்கத்தை வைத்தால், உள்ளே இருக்கின்ற பொன்னை அது காண்பிப்பது போன்று, திருநெடுந்தாண்டகம் (1) – எண்ணும் பொன் உருவாய் – என்பதற்கு ஏற்ப விரும்பத்தக்கதாக திருமேனி உள்ளதால், “பொன் உருவம்” என்று கூறப்படும் அந்தத் திருமேனியானது ப்ரகாசமாக உள்ளது. (நிரவதிக தேஜோ ரூபமாக இருத்தல்) - நித்யஸூரிகள் மற்றும் முக்தர்கள் ஆகியவர்களுடைய சரீரங்களும், ஸர்வேச்வரனுடைய திருமேனியும் ஒரே திரவியமாக உள்ளன; மின்னலுடைய ஒளியும், சூரியனுடைய ஒளியும் ஒரே திரவியமாக உள்ளபோதிலும், சூரியனுடைய சரீரத்தில் உள்ள ஒளிக்கு மேன்மை உள்ளது; இதனைப் போன்று அவர்களுடைய சரீரத்தில் உள்ள தேஜஸ்ஸானது அளவுடன் கூடியதாகவும், தனது தேஜஸ்ஸானது அளவற்றதாகவும் உள்ளான். (ஸௌகுமார்யாதி கல்யாண குண கண நிதியாக இருத்தல்) – மென்மை, அழகு, திருமேனியின் உள்ளும்புறமும் ஒரே போன்று இனிமை, நறுமணம், இளமை என்பது போன்ற பலவிதமான திருக்கல்யாண குணங்களுடைய கூட்டத்திற்கு இருப்பிடமாக இருத்தல். கத்யத்தில் – ஸௌந்தர்ய ஸௌகந்த்ய ஸௌகுமார்ய லாவண்ய யௌவநாத்யநந்த குண நிதி திவ்ய ரூப – என்று எம்பெருமானார் அருளிச்செய்தார். (யோகி த்யேயமாக இருத்தல்) - பகவானை எப்போதும் த்யானித்தபடி உள்ள பரமயோகிகளுக்கு, சுபத்தின் இருப்பிடமாக இருந்தபடி, எப்போதும் த்யானத்திற்கான விஷயமாக இருத்தல். ஸ்ரீவிபு. (1-9-122) - காசாந்யா த்வாம்ருதே தேவி ஸர்வ யஜ்ஞ மயம் வபு: அத்யாஸ்தே தேவதேவஸ்ய யோகி சிந்த்யம் கதாப்ருத: - மஹாலக்ஷ்மியே! அனைத்து தேவர்களுக்கும் தேவனாக உள்ளவனும், கதையைத் தாங்கி நிற்பவனும், அனைத்து யோகிகளாலும் த்யானிக்கத்தக்கபடி உள்ள திருமேனி உள்ளவனும், யாகங்களின் வடிவான திருமேனி கொண்டவனும் ஆகிய அவனுடைய திருமேனியை, உன்னை அல்லாமல் யார் அடைவார்கள் - என்று அவனுக்கே உரிய திருமேனி மட்டுமே யோகிகளால் த்யானிக்கத்தக்கதாக கூறப்பட்டது அல்லவோ? (ஸகல ஜந மோஹநமாகை இருத்தல்) - ஞானம் உள்ளவர்கள் மற்றும் ஞானம் அற்றவர்கள் என்பதான வேறுபாடு இன்றி, அனைத்து உயிர்களையும் தனது மேன்மையால் மயக்கம் அடையும்படிச் செய்கிறான். அயோத்யாகாண்டம் (3-79) - பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம் - ஆண்களுடைய பார்வையையும் சித்தத்தையும் அபகரிக்கும் இராமன் – என்றும், ஸுந்தரகாண்டம் - ஸர்வ ஸத்வம் நோஹர: – அனைவருடைய மனதையும் அபகரிப்பவன் – என்றும், பெருமாள் திருமொழி (8-2) - கண்டவர்தம் மனம் வழங்கும் - என்றும் கூறுவது காண்க. (அனைத்து இன்பமான விஷயங்களிலும் வைராக்யம் பிறத்தல்) - தனது திருமேனியுடைய மிகுதியான மேன்மையைக் கண்டவர்களுக்குத் தன்னைத் தவிர உள்ள மற்ற அனைத்து விஷயங்களால் ஏற்படும் அனுபவங்களில் உள்ள உறுதியைத் தவிர்ப்பான். இரண்டாம் திருவந்தாதி (42) – பேரின்பம் எல்லாம் துறந்தார் தொழுதாரத்தோள் - என்பது காண்க. (நித்யர்கள் முக்தர்கள் ஆகியவர்களால் அனுபவிக்கும்படி இருத்தல்) - எல்லையற்ற ஞானம் போன்ற குணங்கள் மிகுந்தவர்களாகிய நித்யஸூரிகள் மற்றும் முக்தர்களால், சாந்தோக்யத்தில் – ஸதா பச்யந்தி - எப்போதும் நோக்கியபடி உள்ளனர் - என்பதற்கு ஏற்ப, எப்போதும் அனுபவிக்கப்படுபவனாக உள்ள நிலை. (தாமரைக்குளம் போன்று அனைத்து துன்பங்களையும் நீக்குதல்) - திருவாய்மொழி (8-5-1) - கண் கை கால் தூய செய்யமலர்களா - என்று தொடங்கி நம்மாழ்வார் வர்ணித்தபடி, திவ்யமான திருமேனியின் உறுப்புகள் மற்றும் திருமேனி என்றுள்ள சேர்த்தி காரணமாக, நீர்நிலை என்பதே தெரியாதபடி தாமரைகள் மலர்ந்து பரிமளம் வீசியபடி உள்ள ஒரு குளம் போன்று, தன்னை வந்து அடைந்தவர்களுடைய பலவிதமான ஸம்ஸாரத்துன்பம் மற்றும் தன்னைப் பிரிந்து வாடுதல் என்னும் துன்பம் என்னும் வேறுபாடு இன்றி, அனைத்துவிதமான துன்பங்களையும் போக்குவதாக உள்ள திருமேனி. (அநந்தாவதார கந்தமாகை) – “அஜாயமாநோ பஹுதா விஜாயதே – பிறப்பற்ற அவன் பலவிதமாகப் பிறக்கிறான்” என்றும், கீதை (4-5) - பஹூநி மே வ்யதீதாநி – எனதும் உனதும் பல பிறவிகள் சென்றுள்ளன - என்றும் கூறுவதற்கு ஏற்ப உள்ள எண்ணற்ற அவதாரங்கள்; இவை அனைத்தும், பரமபதத்தில் உள்ள தனது திருமேனியை மற்ற ஜாதியை போன்று மாற்றிக்கொண்டு, தீபத்தில் ஏற்றப்பட்ட மற்ற தீபங்கள் போன்று வருவதாக உள்ளதால், அவை அனைத்திற்கும், மூல திருமேனியாக உள்ள நிலை. கீதை (4-6) - ப்ரக்ருதிம் ஸ்வாமதிஷ்ட்டாய ஸம்பவாமி - எனது திருமேனியை எடுத்தபடி இங்கு அவதரிக்கிறேன் - என்றும், மஹாபாரதம் - கல்பே கல்பே ஜாயமாநஸ - கல்பங்கள் தோறும் எனது திருமேனியுடன் நான் அவதரிக்கிறேன் – என்றும், திருவாய்மொழி (4-5-5) – ஆதி அம் சோதியுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த - என்றும் கூறுவது காண்க. (அனைத்திற்கும் ரக்ஷகமாக இருத்தல்) - ஐச்வர்யத்தை மட்டுமே வேண்டுபவர்கள், ஆத்ம அனுபவத்தை மட்டுமே வேண்டுபவர்க்ள், பகவானைச் சரணம் புகும் உபாஸகர்கள், பகவானுடைய திருவடிகளில் சரணாகதி அடைந்தவர்கள், எப்போதும் அவனுடைய கைங்கர்ய அனுபவத்தை அடைந்தபடி உள்ள நித்யர்கள் மற்றும் முக்தர்கள் என்பதான வேறுபாடுகள் இன்றி, அனைவருடைய தடைகள் நீக்குதல் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்தல் போன்றவற்றைச் செய்தல் என்பது திருமேனியை வைத்துக் கொண்டே ஆகும் என்பதால், திருமேனி அனைவருக்கும் காப்பாற்றும் ஒன்றாக உள்ளது. (அனைவராலும் அண்டும்படி உள்ளது) - இரண்டு விபூதிகளில் உள்ள அனைவராலும் அடையப்படுவதாக திருமேனி உள்ளது. (ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டபடி இருத்தல்) - இங்கு கூறப்பட்டதான “அனைவராலும் அண்டும்படி இருத்தல்” என்பது மறைமுகமாக வெளிப்படும்படியாக, ஸ்ரீவிஷ்ணுபுராணத்தில் உள்ள ஆயுதங்கள் மற்றும் ஆபரணங்கள் குறித்து உரைக்கும் அத்யாயத்தில் கூறப்பட்டபடியாக, அபிமான தேவதைகளாக உள்ள திவ்யமான ஆயுதங்கள் மற்றும் திவ்யமான ஆபணங்களால் அலங்கரிக்கப்பட்டபடி இருத்தல். ஸ்ரீவிபு. (1-22, 67 முதல் 74) – ஆத்மாநமஸ்ய ஜகதோ நிர்லேபமகுணாமலம், பிபர்த்தி கௌஸ்துபமணிம் ஸ்வரூபம் பகவாந் ஹரி: ஸ்ரீவத்ஸ ஸம்ஸ்த்தாநதரமநந்தேச ஸமாச்ரிதம், ப்ரதாநம் புத்திரப்யாஸ்தே கதாரூபேண மாதவே, பூதாதிமிந்த்ரியாதிஞ்ச த்விதாஹங்காரமீச்வர: பிபர்த்தி சங்க்க ரூபேண சார்ங்க ரூபேண ச ஸ்த்திதம், சல ஸ்வரூப மத்யந்த ஜவேநாந்தரிதா நிலம் சக்ர ஸ்வரூபஞ்ச மநோ தத்தே விஷ்ணு: கரேஸ்த்திதம், பஞ்சரூபாது யாமாலா வைஜயந்தீ கதாப்ருத: ஸா பூதஹேது ஸங்காதோ பூத மாலாச வை த்விஜ, யாநீந்த்ரிய விசேஷாணி புத்தி கர்மாத்மகாநிவை சர ரூபாண்ய சேஷாணிதாநி தத்தே ஜநார்தந: பிபர்த்தி யச்சாஸிரத்நம் அச்யுதோதயந்த நிர்மலம், வித்யாமயந்து தத் ஜ்ஞாநம் வித்யாச மம ஸம்ஸ்த்திதம் – இயல்பாகவே துன்பம் ஏதும் இல்லாதவர்களும், தாழ்ந்த குணம் அற்றவர்களும், தோஷம் அற்றவர்களும் ஆகிய ஜீவாத்மாக்களை, ஸ்ரீஹரி தனது கௌஸ்துபமணி போன்று ஏற்கிறான்; ஸ்ரீவத்ஸம் என்று மருவானது ஆதிசேஷனில் உள்ள ஸ்ரீஹரியால் தரிக்கப்பட்டது; புத்தியானது, கதை ரூபத்தில் மாதவனால் தரிக்கப்பட்டது; தாமஸ அஹங்காரம் மற்றும் ஸாத்விக அஹங்காரம் ஆகியவை, சங்கு மற்றும் சக்ரம் என்றும், சார்ங்கம் என்ற வில் ரூபமாகவும் உள்ளன; ஸஞ்சலமான இயல்பில் வாயுவையும் மிஞ்சுகின்ற மனமானது, சக்கரமாகத் தரிக்கப்பட்டது. வைஜயந்தியானது தந்மாத்ரையாக உள்ளது; பஞ்சபூதங்களும் இந்த்ரியங்களும் அம்பு ரூபமாக உள்ளன; கட்கம் என்ற வாளானது ஞானமாக உள்ளது - என்பது காண்க.