Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 174)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
இம்மூன்றும் தனித்தனியே நாலு ப்ரகாரமாயிருக்கும்.
இனி இந்த ஸ்ருஷ்ட்யாதிகள், தான் ப்ரத்யேகம் சதுர்விதமா யிருக்கையாலே, அத்தையும் தர்சிப்பிக்கைக்காக அருளிச்செய்கிறார் (இம்மூன்றும் தனித்தனியே நாலு ப்ரகாரமாயிருக்கும்) என்று.
அடுத்து, இத்தகைய ஸ்ருஷ்டி போன்றவற்றில் ஸர்வேச்வரன் நான்குவிதமான உள்ளான் என்பதால், அதனை வெளிப்படுத்தத் திருவுள்ளம் கொண்டு அருளிச்செய்கிறார்.