Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 169)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

விசிஷ்ட விசேஷண ஸத்வாரகமாக.

அதுக்கு உத்தரம் அருளிச்செய்கிறார் (விசிஷ்ட விசேஷண ஸத்வாரகமாக) என்று.

கடந்த சூர்ணையில் எழுப்பிய சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.

– “விசிஷிடஞ்ச தத் விசேஷணம் சேதி விசிஷ்ட விசேஷணம்” என்று, ப்ரதமம் கர்மதாரய ஸமாஸத்தைப் பண்ணி, “த்வாரேண ஸஹ வர்த்தத இதி ஸத்வாரகம்” எனறு அநந்தர பதத்தை பஹுவ்ரீஹித்து, (விசிஷ்ட விசேஷணேந ஸத்வாரகம் விசிஷ்ட விசேஷண ஸத்வாரகம்) என்று த்ருதீயா தத் புருஷனாக சப்தத்துக்கு வ்யுத்பத்தி பண்ணிக்கொள்வது. விசிஷடமாவது விசேஷ யுக்தமானதாய், விசிஷ்டமான விசேஷணமென்று, தண்ட குண்டலாதிகள் போலன்றிக்கே சரீர பூதமாகையாலே, ப்ருதக் ஸித்தயர்ஹமல்லாத விசேஷத்தை உடைத்தான சித் அசித் ரூப விசேஷணத்தைச் சொல்லுகிறது. அன்றிக்கே, விசிஷ்ட விசேஷணம் என்கிறவிதுக்கு சரீர பூதமாய்க் கொண்டு, என்றுமொக்கத் தன்னோடே கூடியிருக்கிற விசேஷணமென்று பொருளாகவுமாம். அப்போதும் ப்ருதக்ஸித்தி அர்ஹமான தண்ட குண்டலாதிகளில் வ்யாவ்ருத்தி ஸித்திக்குமிறே. விசேஷணத்தாலே ஸத்வாரகமாகவென்றது இப்படி அப்ருதக் ஸித்தமான விசேஷணமாகிற ஹேதுவாலே த்வார ஸஹிதமாகவிவனுக்கு பரிணாமம் உண்டாகிறதென்கை. இத்தால், அப்ருதக் ஸித்தமான சித் அசித் ரூப விசேஷண த்வாரா இவனுக்கு பரிணாமம் உண்டாகிறது என்றதாயிற்று.

“விசிஷ்டஞ்ச தத் விசேஷணம் சேதி விசிஷ்ட விசேஷணம் - தனித்தன்மையுடன் அடையாளம் காண்பிக்கப்படும் பொருள் மற்றும் அடையாளம் என்பதே அடையாளத்துடன் கூடியுள்ள பொருள்” என்பதாக முதலில் பண்புத்தொகையாக உரைக்கிறார். அடுத்து, “ஸத்வாரகம்” என்பதை அன்மொழித்தொகை என்பதாகக் கொண்டு, “த்வாரேண ஸஹ வர்த்தத இதி ஸத்வாரகம் - மற்றவற்றுடன் சேர்ந்து நிற்பது என்பது ஸத்வாரகம்” என்று உரைக்கிறார்; அதாவது இங்கு, “விசேஷணத்துடன் கூடியுள்ள ஸத்வாரகம்” என்று மூன்றாம் வேற்றுமையாகக் கொள்க. விசிஷ்டம் என்பது அடைகொளியுடன் கூடியுள்ளதாக, விசிஷ்டமான விசேஷணம். அதாவது “தடியை வைத்துள்ளவன் தண்டீ” என்றும், “குண்டலம் அணிந்தவன் குண்டலீ” என்றும் அடையாளம் காண்பிக்கப்படுவது போன்று அல்லாமல், சரீரம் உள்ளதால் தனியாகப் பிரிந்து நிற்பதற்குத் தகுதி அற்றதாக உள்ள சிறப்பு கொண்ட சித் மற்றும் அசித் வடிவத்தில் உள்ள அடையாளங்களைக் கூறுகிறார். அல்லது “விசிஷ்ட விசேஷணம்” என்பதற்கு, சித் மற்றும் அசித் ஆகியவற்றைச் சரீரமாகக் கொண்டு, எப்போதும் தன்னுடன் கூடியுள்ள நிலை என்றும் கூறலாம். அப்போதும், சரீரம் முதலானவற்றை விட, பிரிந்து அறிதலுக்குத் தகுதியாக உள்ள தடி மற்றும் குண்டலம் ஆகியவற்றிலிருந்து வேறுபாடு உண்டாகும் அல்லவோ? “விசேஷணத்தாலே ஸத்வாரகம்” - இவ்விதம் ப்ரஹ்மத்தை விட்டு அகலாதபடி உள்ள விசேஷணம் என்ற காரணத்தால், சித் மற்றும் அசித் ஆகியவை மூலமாக இவனுக்கு மாற்றம் ஏற்படுவதாகத் தோன்றுகிறது என்று கருத்து.