Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 168)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஆனால் பரிணாமமுண்டாம்படி யென்னென்னில்.
ஸ்வருபத்துக்கு விகாரமில்லையாகில் “இவன்தானே ஜகத்தாய் பரிணமிக்கிறான்” என்ற பரிணாமம் இவனுக்குண்டாம்படி எங்ஙனே? என்கிற சங்கையை அநுவதிக்கிறார் (ஆனால் பரிணாமமுண்டாம்படி என்? என்னில்) என்று.
இவனுடைய ஸ்வரூபத்திற்கு மாற்றம் ஏற்படுவதில்லை என்றால், “இவன்தானே ஜகத்தாய் பரிணமிக்கிறான்” என்று கூறப்படும் மாற்றம் இவனுக்கு எப்படி உண்டாகிறது என்று சந்தேகத்தை எழுப்பிக் கொள்கிறார்.