Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 167)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஸ்வரூபத்துக்கு விகாரமில்லாமையாலே.
அத்தைப் பரிஹரிக்கிறார் (ஸ்வரூபத்துக்கு) இத்யாதியாலே.
அந்த ஐயத்தை தீர்த்து வைக்கிறார்.
– அதாவது, சித் அசித் ரூப விசேஷண விசிஷ்டனான தானே ஜகத்தாய் பரிணமிக்குமிடத்தில விசேஷ்யமான ஸ்வரூபத்துக்கு விகாரமில்லாமையாலே நிர்விகாரன் என்னக் குறையில்லை யென்கை.
சித் மற்றும் அசித் ரூபமாக உள்ள வஸ்துக்களைத் தனது விசேஷணமாகக் கொண்டுள்ள தான், ஜகத்தாக மாறி நிற்கும்போது, அவற்றின் விசேஷ்யப் பொருளாக உள்ள தனது ஸ்வரூபத்திற்கு மாற்றம் இல்லை; ஆகவே இவன் மாற்றம் அடையாதவன் என்பதில் முரண்பாடு இல்லை.