Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 166)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஆனால், நிர்விகாரனென்னும்படி யென்னென்னில்,

இப்படி, தானே ஜகத்தாய் பரிணமிக்குமாகில் “நிர்குணம் நிரஞ்ஜநம்”, “நிஷ்களம் நிஷ்க்ரியம் சாந்தம்”, “ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்ரஹ்ம”, “அவிகாராய சுத்தாய” என்று இவனை நிர்விகாரனாகச் சொல்லும்படி யெங்ஙனே? என்கிற சங்கையை அநுவதிக்கிறார் (ஆனால் நிர்விகாரன் என்னும்படியென்? என்னில்) என்று.

ஆனால் இவ்விதம் அவனே ஜகத்தாக மாறி நிற்கிறான் என்றால், ஆத்ம. (68) - நிர்குணம் (குணம் அற்றது) … நிரஞ்ஜனம் (தோஷம் அற்றது) – என்றும், ச்வே (6-19) - நிஷ்கலம் (உருவம் அற்றது), நிஷ்க்ரியம் (செயல்கள் அற்றது), சாந்தம் (அமைதியானது) – என்றும், தை. (1-1) - ஸத்யம் ஜ்ஞாநம் அநந்தம் – ஸத்யம், ஞானம், எல்லையற்ற ப்ரஹ்மம் - என்றும், அவிகாராய சுத்தாய – மாற்றம் அடையாதவன் தூய்மையாவன் - என்றும் உள்ள வாக்கியங்கள், “இவனை மாற்றம் அற்றவன்” என்று கூறுவது எப்படி என்ற சந்தேகத்தை எழுப்பிக்கொள்கிறார். இதற்கான விடையை அடுத்த சூர்ணையில் கூறுகிறார்.