Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 163)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

ஆனால், ஸம்ஹாரத்தில் லீலை குலையாதோ வென்னில்.

இப்படி ஜகத்ஸ்ருஷ்டி பண்ணுகிறது லீலார்த்தமாகவாகில், ஸம்ஹார தசையில் லீலை குலையாதோ? என்கிற சங்கையை அநுவதிக்கிறார் (ஆனால், ஸம்ஹாரத்தில் லீலை குலையாதோ? என்னில்) என்று.

இவ்விதம் ஸ்ருஷ்டி என்பது லீலைக்காகவே உள்ளது என்று கூறினால், ஸம்ஹார நிலையில் இப்படிப்பட்ட லீலையானது குறையாதோ என்ற சந்தேகத்தை எழுப்பிக் கொள்கிறார்.