Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 159)
மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்
ஆகையால் ஈச்வரனே ஜகத்துக்குக் காரணம்.
– ஆக, இப்படி விரோதி பரிஹாரங்களைப் பண்ணி, ப்ரதிஜ்ஞாநுகுணமாக நிகமிக்கிறார் (ஆகையால் ஈச்வரனே ஜகத்துக்குக் காரணம்) என்று.
ஆக, இப்படியாக “ஸர்வேச்வரனே ஜகத்காரணம்” என்பதற்கு விரோதமாக உரைக்கும் கருத்துக்களுக்குச் சமாதானம் உரைத்து, தான் முன்பு செய்த ப்ரதிஜ்ஞைக்கு ஏற்றபடி முடிக்கிறார்.
ஆகையால் என்றது, சேதநாசேதநங்கள் இரண்டும் காரணமன்றிக்கே யொழிகையாலே யென்கை.
“ஆகையால்” என்று கூறுவது ஏன்? முன்பு கூறப்பட்ட சேதநர்கள் மற்றும் அசேதநமான ப்ரக்ருதி ஆகிய இருவரும் ஜகத்காரணம் இல்லை என்று தள்ளப்படுவதால், இவ்விதம் கூறுகிறார்.