Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 158)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

கர்ம பரதந்த்ரனுமாய் துக்கியுமாயிருக்கையாலே.

எத்தாலே? என்ன அருளிச்செய்கிறார் (கர்மபரதந்த்ரனுமாய்) என்று தொடங்கி.

ஏன் சேதநன் ஜகத்காரணமாக மாட்டான் என்பதற்கு விடை அருளிச்செய்கிறார்.

– அதாவது, அஸங்குசித ஜ்ஞாந சக்திகனாய்க்கொண்டு தான் நினைத்தபடி யொன்றுஞ்செய்ய க்ஷமனல்லாதபடி கர்மாதீநனுமாய் ஆநந்தியாய்க்கொண்டு ஜகத்வ்யாபாரத்திலே மூளுகைக்கு யோக்யதையில்லாதபடி துக்கியுமாயிருக்கையாலே யென்கை. “அபஹதபாப்மா” என்கிறபடியே, அகர்மவச்யனுமாய், (ஆநந்தமய:) என்கிறபடியே நிரதிசய ஆநந்தியுமாயிருக்குமவனுக்கிறே அப்ரதிஹத ஜ்ஞாநசக்திகனாய் மந: ப்ரீதியுடையவன் பண்ணும் ஜகத்வ்யாபாரங்கூடுவது; “ப்ரஹ்மாத்யாஸ் ஸகலாதேவா மநுஷ்யா: பசவஸ் ததா, விஷ்ணோ மாயாமஹா வர்த்தமோஹாந்ததம ஸாவ்ருதா: ஆப்ரஹமஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர் வ்யவஸ்திதா:, ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வசவர்த்திந:” என்கிறபடியே காமவச்யருமாய், “தத: க்ரோத பரீதேந ஸம்ரக்த நயநேந ச வாமாங்குஷ்டநகாக்ரேண சிந்நம் தஸ்ய சிரோ மயா, யஸ்மாதநபராதஸ்ய சிரச்சிந்நம் த்வயா மம, தஸ்மாச் சாப ஸமாவிஷ்ட கபாலீ த்வம் பவிஷ்யஸி” என்கிறபடியே, தலையறுப்பாரும் அறுப்புண்பாருமாய்க்கொண்டு துக்கிகளுமாயிருப்பார்க்கு ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரம் கூடாதிறே.

அதாவது, சுருங்கியுள்ள ஞானம் மற்றும் சக்தி ஆகியவற்றைக் கொண்டவனாக, தான் எண்ணியபடி எதனையும் செய்ய இயலாதபடி உள்ளவனாக, கர்ம வசப்பட்டவனாக, ஆனந்தம் நிறைந்தவனாக உள்ளபோதிலும், ஜகத்தை ஸ்ருஷ்டித்தல் போன்றவற்றில் ஈடுபடத் தகுதி அற்றவனாக, துக்கத்தில் உள்ளவனாக இருப்பதால், சேதநன் ஜகத்காரணமாக மாட்டான். சாந்தோக்யத்தில் – அபஹதபாப்மா - பாபங்கள் அற்றவன் – என்பதற்கு ஏற்ற உள்ளவனாகவும், கர்மவசப்படாதபடி உள்ளவனாகவும், ஆநந்தமய: - எல்லையில்லாத ஆனந்தம் நிறைந்தவன் – என்பதற்கு ஏற்ப எல்லையில்லாத ஆனந்தம் உள்ளளவனாகவும் இருக்கும் ஒருவனுக்கு மட்டுமே, “தடையில்லாத ஞானம் உள்ளவனும், சக்தி நிறைந்தவனும், மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனும்” ஆகிய ஒருவன் செய்யும் ஜகத் ஸ்ருஷ்டி போன்றவை கைகூடும்? விஷ்ணு தர்மத்தில் - ப்ரஹ்மாத்யாஸ் ஸகலாதேவா மநுஷ்யா: பசவஸ் ததா, விஷ்ணோ மாயாமஹா வர்த்தமோஹாந்ததம ஸாவ்ருதா: ஆப்ரஹமஸ்தம்ப பர்யந்தா ஜகதந்தர் வ்யவஸ்திதா:, ப்ராணிந: கர்ம ஜநித ஸம்ஸார வசவர்த்திந: - நான்முகன் உள்ளிட்ட விஷ்ணுவின் மஹாமாயை என்ற மோகத்தில் ஆழ்த்தப்பட்டு, அறியாமை என்ற இருளில் உள்ளனர்; இந்த உலகத்தில் உள்ள நான்முகன் தொடங்கி புல்பூண்டு முடிய உள்ள அனைத்தும் அவரவர்கள் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப ஸம்ஸாரத்தில் உள்ளனர் – என்பதற்கு ஏற்ப கர்மவசப்பட்டவர்களும்; மத்ஸ்யபுராணம் – தத: க்ரோத பரீதேந ஸம்ரக்த நயநேந ச வாமாங்குஷ்டநகாக்ரேண சிந்நம் தஸ்ய சிரோ மயா, யஸ்மாதநபராதஸ்ய சிரச்சிந்நம் த்வயா மம, தஸ்மாச் சாப ஸமாவிஷ்ட கபாலீ த்வம் பவிஷ்யஸி – அதன் பின்னர் கோபத்தால் சிவந்த கண்கள் கொண்டவனும் ஆகிய என்னால் (ருத்ரன்), எனது இடதுகை கட்டைவிரல் நுனி நகத்தால், எனது தந்தையாகிய நான்முகனுடைய தலை வெட்டப்பட்டது; எந்தக் காரணத்தால் எந்தவிதமான தவறும் செய்யாமல் இருந்த எனது (நான்முகன்) தலையானது உன்னால் (ருத்ரன்) அறுக்கப்பட்டதோ, அதன் விளைவாக நீ சாபம் நிறைந்தவனாக, மண்டை ஓட்டைக் கையில் ஏந்தியபடி இருக்கப் போகிறாய் - என்பதற்கு ஏற்ப, தலையை அறுப்பவர் மற்றும் தலை வெட்டப்பட்டவர் என்பதான துக்கங்களுடன் உள்ளவர்களும் ஆகிய இவர்களுக்கு ஜகத்தை ஸ்ருஷ்டித்தல் போன்றவை ஏற்படாது.