Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 154)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

பரமாணுவில் ப்ரமாணமில்லாமையாலும் ச்ருதி விரோதத்தாலும் அது சேராது.

இவர்கள் மஹீ மஹீதராதி ஸகலகார்யங்களும் பரமாணு பரிணாமமென்றிறே சொல்லுவது; அந்த பக்ஷத்தை நிராகரிக்கிறார்.

இவர்கள், பூமி மற்றும் மலை போன்ற அனைத்து கார்யப்பொருள்களும் பரமாணுவின் மாற்றங்களால் ஏற்பட்டவை என்றே கூறுகிறாரகள். அந்தக் கருத்தைத் தள்ளுகிறார்.

(பரமாணுவில் ப்ரமாணமில்லாமையாலும் ச்ருதி விரோதத்தாலும் அது சேராது) என்று. அதாவது, ஜகத்காரணதயா அங்கீகரிக்கப்படுகிற பரமாணுக்கள் ப்ரதயக்ஷ ஸித்தமுமன்றியே ஆகமஸித்தமுமன்றியே அநுமாநத்தாலே ஸாதிக்கப் பார்க்கில், அது ஆகம விருத்தமான அர்த்தத்தை ஸாதிக்கமாட்டாமையாலே, அநுமாந ஸித்தமுமன்றியேயிருக்கையாலே, பரமாணு ஸத்பாவத்தில ஒரு ப்ரமாணமும் இல்லாமையாலும், ஈச்வரனே ஜகத்காரணம் என்கிற ச்ருதிக்கு விரோதமாகையாலும், பரமாணுக்கள் ஜகத்காரணம் என்றவது சேராதென்கை.

ஜகத்காரணமாக இவர்கள் கூறுகின்ற பரமாணுக்கள், ப்ரத்யக்ஷமாகக் காணக்கூடியவை அல்ல; ஆகமத்தால் புலப்படுவதும் இல்லை. அனுமானத்தாலும் நிக்ரூபிக்க இல்லாத ஒன்றாகும்; காரணம், ஆகமத்திற்கு விரோதமான விஷயத்தை அனுமானம் நிரூபிக்காது. அநுமானத்தாலும் நிரூபிக்க இயலாது என்பதால், பரமாணுவின் இருப்பு என்பதற்கு எந்தவிமான ப்ரமாணமும் இல்லை என்பதாலும், இது “ஈச்வரனே ஜகத்காரணம்” என்ற ச்ருதிகளுக்கு முரணாக உள்ளதாலும், பரமாணுக்களே ஜகத்காரணம் என்ற கருத்து பொருந்தாது.