Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 149)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

இவற்றில் வாத்ஸல்யாதிகளுக்கு விஷயம் அநுகூலர், சௌர்யாதிகளுக்கு விஷயம் ப்ரதிகூலர், இவற்றுக்குக் காரணமான ஜ்ஞாந சக்த்யாதிகளுக்கு எல்லாரும் விஷயம்.

இப்படியிருந்துள்ள குணங்கள் தான் மூன்றுவகைப்பட்டி ருக்கையாலே அம்மூன்றுவகைக்கும் விஷயங்களை வகுத்து அருளிச்செய்கிறார் “இவற்றில்” என்று தொடங்கி.

இப்படியாக அவனுடைய குணங்கள் மூன்றுவகையாக உள்ளதால், அந்தந்த மூன்று வகைகளுக்கும் உள்ள விஷயங்களைப் பிரித்து அருளிச்செய்கிறார்.

(வாத்ஸல்யாதிகள்) என்கிற ஆதிசப்தத்தாலே, ஸௌசீல்ய ஸௌலப்ய மார்தவார்ஜவாதிகளான குணவிசேஷங்களெல்லாவற்றையும் சொல்லுகிறது. விஷயம் அநுகூலரென்றது, ஆச்ரிதரென்றபடி. (சௌர்யாதிகளுக்கு) என்கிற ஆதிசப்தத்தாலே பராக்ரமத்தைச் சொல்லுகிறது. விஷயம் ப்ரதிகூலரென்றது, ஆச்ரித விரோதிகளென்றபடி. “த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷதந்நம் நைவ போஜயேத் பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா:” என்று ஆச்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்களென்று அருளிச்செய்தானிறே. (இவற்றுக்குக் காரணமான ஜ்ஞாந சக்த்யாதிகள்) என்கிறவிதில், ஆதி சப்தத்தாலே, பல ஐச்வர்ய வீர்ய தேஜஸ்ஸுக்களைச் சொல்லுகிறது. வாத்ஸல்யாதிகளுக்கும் சௌர்யாதிகளுக்கும் ஜ்ஞாந சக்த்யாதிகள் காரணமாகையாவது, “ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுலமைச்வர்யமகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபி ச பரம் தேஜச்சேதி ப்ரவர குண ஷட்கம் ப்ரதமஜம் குணா நாம நிஸ்ஸீம நாம கண நவிகுணா நாம ப்ரஸவபூ:” என்றும், “மங்கள குணளகதுகாஷ்ஷடேதா:” என்றும் சொல்லுகிறபடியே, அவற்றுக்கு ஊற்றுவாயாயிருக்கை. அவைதான் வஸ்தூத்கர்ஷாபாதக ஷாட்குண்யாயத்த குணபாவமாயிறே இருப்பது. “எம்பெருமானுடைய திவ்யாத்ம குணங்களாவன: ஜ்ஞாந சக்த்யாதி ஷட்குணங்களும், அதிலே பிறந்த ஸௌசீல்யாதிகளும்” என்கிற விவ்வாக்யத்துக்கு அர்த்தமெழுதுகிறவளவில், “அதிலே பிறக்கையாவது வஸ்தூத்கர்ஷாபாதக ஷாட்குண்யாயத்த குணபாவமாகை” என்றிறே விவரணத்தில் ஆச்சான்பிள்ளை யருளிச்செய்தது. இந்த குண ஷட்கத்திலும் வைத்துக்கொண்டு, ஜ்ஞாநமாவது “அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி நித்யம் ஸர்வாவகாஹநம் ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு: ப்ரதமம் குணசிந்தகா” என்கிறபடியே, என்றுமொக்க ஸர்வவிஷய ப்ரகாசகமுமாய், ஸ்வப்ரகாசமுமான குண விசேஷம். சக்தியாவது, “ஜகத் ப்ரக்ருதிபாவோ யஸ்ஸா சக்தி: பரிகீர்த்திதா:” என்கிற ஜகத் ப்ரக்ருதி பாவமாதல், அகடிதகடநா ஸாமார்த்யமாதல். பலமாவது, “ச்ரமஹாநிஸ்து யா தஸ்ய ஸததம் குர்வதோ ஜகத், பலம் நாம குணஸ்தஸ்ய கதிதோ குண சிந்தகை:” என்கிற ஜகத்காரணத்வ ப்ரயுக்தமான ச்ரமமின்றியிலே யொழிகையாதல், “பலம் தாரண ஸாமர்த்த்யம்” என்கிற ஸமஸ்த வஸ்து தாரண ஸாமர்த்த்யமாதல். – ஐச்வர்யமாவது, “கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ரிய பரிப்ரும்ஹிதம், ஐச்வர்யம் நாம தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை:” என்கிற கர்த்ருத்வ லக்ஷணமான ஸ்வாதந்த்ர்யமாதல், ஸமஸ்த வஸ்து நியமந  ஸாமர்த்த்யமாதல். வீர்யமாவது, “தஸ்யோபாதாநபாவேபி விகார விரஹோ ஹி ய: வீர்யம் நாம குணஸ்ஸோயமச்யுதத்வாபரா ஹ்வய:” என்று ஜகதுபாதாநமாகா நிற்கச் செய்தேயும், ஸ்வரூப விகாரமின்றியிலேயொழியும்படியான அவிகாரதை. தேஜஸ்ஸாவது, “ஸஹகார்ய நபேக்ஷா யா தத் தேஜஸ் ஸமுதாஹ்ருதம்” என்கிற ஸஹகாரி நைரபேக்ஷ்யமாதல், பராபிபவந ஸாமர்த்த்யமாதல். இவற்றுக்கு எல்லாரும் விஷயமாகையாவது, அநுகூல ரக்ஷணாதிகளும், ப்ரதிகூல நிரஸநாதிகளும், ஜ்ஞாந சக்த்யாதி விசிஷ்டனாய்க் கொண்டு நிர்வஹிக்க வேண்டுகையாலே இவற்றுக்கு ஸர்வரும் விஷயமாயிருக்கை.

(வாத்ஸல்யாதிகளுக்கு) - இதில் உள்ள “ஆதி – முதலான” என்பதன் மூலம், “சௌசீல்யம், ஸௌலப்யம், மார்தவம், ஆர்ஜவம்” போன்ற பல குண சிறப்புகள் அனைத்தையும் கூறுகிறார். (விஷயம் அநுகூலர்) – அடியார்கள் என்று பொருள். (சௌர்யாதிகளுக்கு) - இதில் உள்ள “ஆதி” என்பது, பராக்ரமத்தைக் கூறியதாகும். (விஷயம் ப்ரதிகூலர்) - அடியார்களுடைய விரோதிகள். மஹாபாரதம் உத்யோகபர்வம் (74-27) – த்விஷத் அந்நம் ந போக்தவ்யம் த்விஷத் அந்நம் நைவ போஜயேத் | பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம ப்ராணா ஹி பாண்டவா: - விரோதிகள் அளிக்கும் உணவை உண்ணக்கூடாது, பகைவர்களுக்கு நாம் உண்ணும்படி உணவு அளிக்கக்கூடாது. அரசனே! பாண்டவர்களுடைய புத்திரர்களை நீ விரோதியாகக் காண்கிறாய்; அவர்கள் எனது உயிர் ஆவார்கள் - என்று, அடியார்களுடைய விரோதிகளைத் தனது விரோதிகளாகக் கொண்டான் அல்லவோ? (இவற்றுக்குக் காரணமான ஜ்ஞாந சக்த்யாதிகள்) - இதில் உள்ள “ஆதி” சப்தமானது “பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ்” ஆகியவற்றைக் கூறுவதாகும். வாத்ஸல்யம் முதலானவற்றுக்கும், சௌர்யம் முதலானவற்றுக்கும் ஞானம் மற்றும் சக்தி ஆகியவை காரணமாக உள்ளன என்றார். அவை எவ்விதம் காரணமாக உள்ளன என்பதற்கு விடை அளிக்கிறார். ஸ்ரீவரதராஜ ஸ்தவம் (95) - ப்ரக்ருஷ்டம் விஜ்ஞாநம் பலமதுலமைச்வர்யமகிலம் விமர்யாதம் வீர்யம் வரத பரமா சக்திரபி ச பரம் தேஜச்சேதி ப்ரவர குண ஷட்கம் ப்ரதமஜம் குணா நாம நிஸ்ஸீம நாம கண நவிகுணா நாம ப்ரஸவபூ: - வரதா! உயர்ந்த ஞானம், ஈடில்லா ஆற்றல், அனைத்து செல்வங்கள், எல்லையற்ற வீர்யம், உயர்ந்த சக்தி, பலம் போன்றதான இவை அனைத்தும், உயர்ந்த வஸ்துவிடம் உள்ள அனைத்துவிமான குணங்களிலும், முதன்மையான ஆறு குணங்களுக்கு - என்றும், ஸ்ரீரங்கராஜ ஸ்தவம் (2-27) – மங்கலகுண ஓக துகா: ஷட் ஏதா: - உன்னுடைய குணங்களான ஞானம், ஐச்வர்யம், சக்தி, வீர்யம், பலம் மற்றும் தேஜஸ் ஆகியவை செய்வது என்னவென்றால் – குற்றம் அற்றவையும், குறைபாடுகள் அற்றவையும், எல்லை இல்லாதவையும், ஒப்பு இல்லாதவையும், இதனைவிட உயர்ந்தது வேறு இல்லாதவையும், எண்ணிக்கை அற்றவையும் ஆகிய எண்ணற்ற பல திருக்கல்யாண குணங்களின் கூட்டத்தை எப்போதும் சுரந்தபடி உள்ளன - என்றும் கூறுவதற்கு ஏற்ப, அவற்றுக்குப் பிறப்பிடமாக உள்ளதால் ஆகும். அத்தகைய ஆறு குணங்கள், அந்த உயர்ந்த வஸ்துவிற்கு மிகுந்த ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. “எம்பெருமானுடைய திவ்யாத்ம குணங்களாவன: ஜ்ஞாந சக்த்யாதி ஷட்குணங்களும், அதிலே பிறந்த ஸௌசீல்யாதிகளும்” என்றுள்ள வாக்கியத்திற்கான விளக்கத்தை அருளிச்செய்யும்போது, “அந்தக் குணங்களில் பிறத்தல் என்பது, வஸ்துவிற்கு உயர்வை ஏற்படுத்தக்கூடிய ஆறு குணங்களின் ஊற்றுவாயாக இருத்தல் ஆகும்” என்று ஸ்வாமி ஆச்சான்பிள்ளை அருளிச்செய்தார். இந்த ஆறு குணங்களில், ஞானம் என்பது, அஜடம் ஸ்வாத்ம ஸம்போதி நித்யம் ஸர்வாவகாஹநம் ஜ்ஞாநம் நாமகுணம் ப்ராஹு: ப்ரதமம் குணசிந்தகா – ஜடப்பொருள் அல்லாததாகவும், தானே வெளிப்படுவதாகவும், தானே தன்னை உணர்த்துவதாகவும், எப்போதும் உள்ளதுமாக, அனைத்தையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளது - என்பதற்கு ஏற்ப, எப்போதும் அனைத்தையும் வெளிப்படுத்துவதாகவும், தானே தன்னை வெளிப்படுத்துவதாகவும் உள்ள குணச் சிறப்பாகும். சக்தி என்பது, ஜகத் ப்ரக்ருதிபாவோ யஸ்ஸா சக்தி: பரிகீர்த்திதா: - இந்த ஜகத்தின் உற்பத்திக்கு காரணமாக உள்ளது எதுவோ அதுவே சக்தி எனப்படுகிறது - என்பதற்கு ஏற்ப, ஜகத்தின் உற்பத்திக்கும், மற்ற எதனாலும் செய்ய முடியாதவற்றைச் செய்ய இயலும் திறனுக்கும் பெயராகும். பலம் என்பது, ச்ரமஹாநிஸ்து யா தஸ்ய ஸததம் குர்வதோ ஜகத், பலம் நாம குணஸ்தஸ்ய கதிதோ குண சிந்தகை: - ஜகத்தை ஸ்ருஷ்டிக்கும் அந்த உயர்ந்த வஸ்துவிற்கு எப்போதும் சிரமம் இன்றி உள்ள தன்மை எதுவோ அதுவே பலம் ஆகும் – என்பதற்கு ஏற்ப, ஜகத்காரணமாக உள்ள வஸ்துவிற்கு சிரமம் ஏற்படாமல் இருத்தல் ஆகும். மேலும், பலம் தாரண ஸாமர்த்த்யம் - பலம் என்பது அனைத்தையும் தாங்குதல் - என்பதற்கு ஏற்ப, அனைத்து வஸ்துக்களையும் தாங்கும் ஸாமர்த்யம் ஆகும். ஐச்வர்யம் என்பது, கர்த்ருத்வம் நாம யத் தஸ்ய ஸ்வாதந்த்ரிய பரிப்ரும்ஹிதம், ஐச்வர்யம் நாம தத் ப்ரோக்தம் குண தத்வார்த்த சிந்தகை: - அந்த உயர்ந்த வஸ்துவிற்கு சுதந்திரமாகச் செயல் புரியும் எந்த ஒரு குணம் உள்ளதோ அதுவே ஐச்வர்யம் என்பதாகும் - என்பதற்கு ஏற்ப, அனைத்து செயல்களையும் செய்வதற்கு அடையாளமாக உள்ள சுதந்திரம் மற்றும் அனைத்தையும் நியமனம் செய்யும் திறன் ஆகியவை ஆகும். வீர்யம் என்பது, தஸ்ய உபாதாந பாவேபி விகார விரஹோ ஹி ய: வீர்யம் நாம குணஸ்ஸோயம் அச்யுதத்வாபரா ஹ்வய: – அந்த அச்சுதன் ஜகத்தின் உபாதானக்காரணமாக உள்ளபோதிலும், அவன் மாற்றம் அடையாமல் உள்ளதற்கு உறுப்பாக எந்த ஒரு குணம் உள்ளதோ, அதுவே வீர்யம் எனப்படுகிறது - என்பதற்கு ஏற்ப, இந்த ஜகத்தின் உபாதானக்காரணமாக உள்ளபோதிலும், எந்தவிதமான மாற்றமும் அடையாமல் உள்ள தன்மையாகும். தேஜஸ் என்பது, “ஸஹகார்ய நபேக்ஷா யா தத் தேஜஸ் ஸமுதாஹ்ருதம் - துணைப்பொருள்களின் உதவி இன்றி இருத்தலுக்குக் காரணமான தன்மையானது, தேஜஸ் ஆகிறது - என்பதற்கு ஏற்ப, மற்ற எந்த உதவியும் எதிர்பாராமல் இருத்தல் மற்றும் விரோதிகளை எளிதாக வெல்லுதல் என்பதாகும். இவை அனைத்திற்கும், அனைவரும் இலக்காக இருத்தல் என்பது “தகுந்த செயல்கள் செய்வதன் மூலம் காப்பாற்றப்படுதல், தகாத செயல்கள் மூலம் தண்டிக்கப்படுதல்” என்பதன் மூலம் ஆகும். ஞானம் மற்றும் சக்தி போன்ற பல சிறப்புகளைக் கொண்டவன் என்பதால், அனைவரையும் தக்கபடி நியமனம் செய்யவேண்டும் என்பதால், அந்தக் குணங்களுக்கு அனைவரும் இலக்காக உள்ளனர்.