Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 147)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

அதாவது, கட்டடங்கவநுகூலமாய், ப்ரகாசமுமாயிருக்கை.

– “ஆநந்தரூப ஜ்ஞாநனாயிருக்கை” என்றது தன்னை உபபாதிக்கிறார், “அதாவது” இத்யாதியாலே.

கடந்த சூர்ணையை மேலும் விளக்குகிறார்.

– கட்டடங்கவென்றது, ஸ்வரூபமுள்ள பரப்பெங்கும் என்றபடி. இத்தால், ஸ்வரூபத்தில் அநநுகூலமாயாதல், அப்ரகாசமாயாதலிருக்குமிட மில்லையென்கை. ஜ்ஞாநாநந்த ஏக ஸ்வரூபனென்றவிதில் ஏக சப்தார்த்தமிதுவிறே. அநுகூலத்வமாவது, ஆஹ்லாதகரத்வம். ப்ரகாசத்வமாவது, ஸ்வயம்ப்ரகாசத்வம். “அநந்யாதீந ப்ரகாசத்வாஹ்லாதகரத்வ ரூப ஜ்ஞாநமேவ யஸ்ய ஸ்வரூபம், ஸ ஹி ஜ்ஞாநாநந்தைக ஸ்வரூப” என்னக்கடவதிறே.

“கட்டங்க” என்றால், “அவனுடைய ஸ்வரூபம் உள்ள அனைத்திலும்” என்பதாகப் பொருள். இதன் மூலம் ஸ்வரூபத்தில் ஏற்புடைய தன்மை இல்லாமல் உள்ளது அல்லது ப்ரகாகம் இன்றி உள்ளது என்பதான நிலைகள் இல்லை என்று கூறப்பட்டது. “ஜ்ஞாநாநந்த ஏக ஸ்ரூபன்” என்பதில் உள்ள “ஏகம்” என்பதற்கு இதுவே கருத்தாகிறது. “ஏற்புடைய தன்மை” என்றால், “இன்பம் அளிக்கவல்லதாக உள்ளது” என்பதாகும். “ப்ரகாசிக்கும் தன்மை” என்றால், “தானே ஒளிர்தல்” என்பதாகும். ஸ்ரீவிபு. – அநந்ய அதீந ப்ரகாசத்வ ஆஹ்லாதகரத்வ ரூப ஜ்ஞாநம் ஏவ யஸ்ய ஸ்வரூபம், ஸ ஹி ஜ்ஞாநாநந்த ஏக ஸ்வரூப - வேறு ஒன்றை அண்டி நிற்காத ப்ரகாசத்தன்மை மற்றும் இன்பமாக உள்ள ஞானம் ஆகியவை யாருக்கு ஸ்வரூபமோ, அவன் ஞான ஆநந்தத்தை ஸ்வரூபமாகக் கொண்டவன் - என்பது காண்க.