Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (சூர்ணை 144)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

அந்தர்யாமியானால் தோஷங்கள் வாராதோ வென்னில்;

அந்தர்யாமியாக இருந்தால் தோஷங்கள் ஏற்படாதோ?

இவற்றோடு தானொட்டற்றிருக்கையன்றிக்கே, அந்தர்யாமிதயா அவஸ்திதனாயிருக்குமாகில், தத்கத தோஷங்கள் வாராதோ? என்கிற சங்கையை அநுவதிக்கிறார் “அந்தர்யாமியானால் தோஷங்கள்வென்னில்” என்று.

இத்தகைய சித் மற்றும் அசித் வஸ்துக்களுடன் ஸர்வேச்வரன் ஒட்டாமல் உள்ளான் என்ற நிலை இன்றி, அவற்றின் அந்தர்யாமியாக உள்ளான் என்னும்போது, அவற்றின் தோஷங்கள் அவனுக்கு ஏற்படாதோ என்ற சந்தேகத்தைத் தானே எழுப்பிக் கொள்கிறார்.