Tattva Trayam - மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம் (Pravesam 1)

மூன்றாம் ப்ரகரணம் – ஈச்வர ப்ரகரணம்

மூன்றாம் ப்ரகரண ப்ரவேசம்

தத்வ த்ரய மூன்றாம் ப்ரகரண வ்யாக்யான அவதாரிகை

இப்படி சிதசித்ரூபமான தத்வ த்வயத்தினுடையவும் ஸ்வரூப ஸ்வபாவ விசேஷங்களை ஸுவ்யக்தமாம்படி அருளிச்செய்து, அநந்தரம், “க்ஷராத்மாநாவீசதே தேவ ஏக:” என்கிறபடியே, ததுபய நியந்தாவான ஈச்வரனுடைய ஸ்வரூபாதிகளை ஸம்சய விபர்யயமற அருளிச்செய்கிறார்.

இவ்விதமாக சித் மற்றும் அசித் ஆகிய இரண்டு தத்வங்களுடைய ஸ்வரூபம் மற்றும் இயல்புகள் ஆகியவற்றின் சிறப்புகளை தெளிவாக அருளிச்செய்தார். அடுத்து, ச்வே. (1-10) - க்ஷராத்மாநாவீசதே தேவ ஏக: - க்ஷரம் போன்ற பலவற்றுக்கும் ஈச்வரனாகிய தேவன் ஒருவனே - என்பதற்கு ஏற்ப சித் மற்றும் அசித் ஆகிய இரண்டிற்கும் எஜமானனாக உள்ள ஈச்வரனுடைய ஸ்வரூபம் முதலானவற்றை, எந்தவிதமான சந்தேகமும் மாறுபாடுகளும் இன்றி அருளிச்செய்கிறார்.