Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 139)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ஸ்பர்சம் இதுக்கும் வாயுவுக்குமநுஷ்ணாசீதம்.

அதாவது த்ரிவித ஸ்பர்சத்திலும் வைத்துக்கொண்டு இவற்றுக்கு ஸ்பர்சம் இதுவென்கை. ஆகையால், இவற்றிலும் காதாசித்கமாகக் காணப்படுகிற ஸ்பர்ச பேதமும் ஒளபாதிகம்.

மூன்றுவிதமான தீண்டுதல்களில், பூமிக்கு வாயுவிற்கும் உஷ்ணம் மற்றும் குளிர்ச்சி ஆகியவை அற்ற தன்மைகளே உள்ளன. இவற்றுக்குச் சில நேரங்களில் ஏற்படும் தீண்டுதல் மாற்றங்கள் அனைத்தும் வந்து சேர்ந்தவை ஆகும்.