Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 138)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

பூமிக்கு நிறமும் ரஸமும் பஹுவிதம்.

அதாவது லோகத்தில் காணப்படுகிற நானாவித வர்ண ரஸங்களுக்கெல்லாம் உத்பத்தி ஸ்தாநமிது என்கை.

பூமியின் நிறமும் சுவையும் பலவிதமாக உள்ளது. உலகத்தில் உள்ள பலவிதமான நிறங்கள் மற்றும் சுவைகள் ஏற்படக் காரணமாக உள்ள இடம் பூமியே ஆகிறது.