Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 137)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
ஜலத்துக்கு நிறம் வெளுப்பு, ஸ்பர்சம் சைத்யம், ரஸம் மாதுர்யம்.
(ஜலத்துக்கு நிறம் வெளுப்பு) இதுக்கு ஸ்வாபாவிக வர்ணமிது. வர்ண பேதம் வந்தவிடம் ஔபாதிகம். (ஸ்பர்சம் சைத்யம்) இத்தால், த்ரிவித ஸ்பர்சத்திலும் சைத்யம் இதுக்குள்ளதென்கை. ஆகையால் இதுக்கு ஸ்பர்ச பேதமுண்டாகிறதும் அந்ய ஸம்ஸர்கத்தாலே. (ரஸம் மாதுர்யம்) இத்தால் இதுக்கு ஸ்வாபாவிக ரஸமிது, ரஸாந்தராபத்தி ஸம்ஸர்கஜமென்கை.
(ஜலத்துக்கு நிறம் வெளுப்பு) - நீருக்கு வெண்மை என்பது இயல்பான நிறம் ஆகும். நீருக்கு உள்ள பலவிதமான நிறங்கள், அதற்கு வந்து சேர்ந்தவை ஆகும். (ஸ்பர்சம் சைத்யம்) - மூன்றுவிதமான தீண்டுதல்களில் இதற்கு உரியது குளிர்ச்சி ஆகும். இத்தகைய தீண்டுதல் தன்மையில் வேறுபாடு ஏற்படுவதற்குக் காரணம், மற்ற பொருள்களுடைய சேர்த்தியால் ஆகும். (ரஸம் மாதுர்யம்) இதற்கு உரிய சுவை இனிமை ஆகும். இத்தகைய சுவையில் வேறுபாடு ஏற்படுவதற்குக் காரணம், மற்ற பொருள்களுடைய சேர்த்தியால் ஆகும்.