Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 135)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
அதில் ஆதித்யாதி தேஜஸ்ஸு ஸ்திரம், தீபாதி தேஜஸ்ஸு அஸ்திரம்.
இதில் ஸ்த்திர அஸ்த்திர விபாகம் பண்ணுகிறார் (அதில் ஆதித்யாதி) என்று தொடங்கி.
இவற்றில் நிலையாக இருத்தல், நிலையின்றி இருத்தல் என்பதான வேறுபாடுகளை அருளிச்செய்கிறார்.
சிரகால வர்த்தித்வத்தாலே ஆதித்யாதி தேஜஸ்ஸு ஸ்த்திரமென்கிறது. க்ஷிப்ர விநாசித்வத்தாலே தீபாதி தேஜஸ்ஸு அஸ்த்திரம் என்கிறது.
நீண்டகாலம் நிலையாக உள்ளதால் சூரியன் முதலான தேஜஸ் என்பவை நிலையானவை ஆகிறது. ஒவ்வொரு நொடியும் அழிவதால், தீபங்களுடைய தேஜஸ் போன்றவை நிலையற்றவை ஆகிறது.