Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 134)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
தேஜஸ்ஸு பௌமாதி பேதத்தாலே பஹுவிதம்.
இனி பரஸ்பர விலக்ஷண ஸ்வபாவங்களான பூத விசேஷங்களில் ஜ்ஞாதவ்ய அம்சங்களை அருளிச் செய்கிறார்.
அடுத்து, ஒன்றுக்கொன்று வேறுபட்ட சிறப்பான இயல்பைக் கொண்டதாக உள்ள பஞ்சபூதங்களில் காணப்படும் அறியப்படவேண்டிய அம்சங்களை அருளிச் செய்கிறார்.
– அதாவது, பௌமம், திவ்யம், ஒளதர்யம், ஆகரஜம் என்கிற பேதத்தாலே அநேக விதமாயிருக்குமென்கை. பார்த்திவ மாத்ரேந்தநமான தேஜஸ்ஸு பௌமம், அதாவது தீபாதி. ஜல மாத்ரேந்தநமான தேஜஸ்ஸு திவ்யம், அதாவது ஆதித்யாதி. பார்த்திவ ஜலேந்தநமான தேஜஸ்ஸு ஔதர்யம், அதாவது ஜாடராக்நி. நிரிந்தநமான தேஜஸ்ஸு ஆகரஜம், அதாவது ஸுவர்ணாதி.
அக்னியானது பௌமம், திவ்யம், ஔதர்யம் மற்றும் ஆகரஜம் என்பது போன்று வேறுபாடுகளால் பலவிதமாக உள்ளது. பஞ்சீகரணத்தால் உண்டாக்கப்பட்ட மண்ணின் மூலமாக மட்டுமே கிடைக்கும் ஒளியானது பௌமம் எனப்படும்; அதாவது தீபம் முதலானவை. நீரிலிருந்து மட்டுமே கிடைக்கின்ற ஒளியானது திவ்யம் எனப்படும்; அதாவது சூரியன் போன்றவை. மண்ணிலிருந்தும், நீரிலிருந்தும் கிடைக்கும் ஒளியானது ஔதர்யம் எனப்படும்; அதாவது ஜாடராக்னி போன்றவை. பாறைகள் மூலமாகக் கிடைக்கும் ஒளியாது ஆகரஜம் எனப்படும்; அதாவது ஸுவர்ணம் போன்றவை.