Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 133)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
த்வகிந்த்ரியத்தாலே தோற்றுகையாலே, வாயு அப்ரத்யக்ஷமென்கிற அதுவுஞ் சேராது.
வாயுவும் ப்ரத்யக்ஷமன்று; ஸ்பர்சாநுமேயமென்றிறே அவர்கள் சொல்லுவது; அத்தையும் நிராகரிக்கிறார் (த்வகிந்த்ரியத்தாலே) என்று தொடங்கி.
“வாயுவும் கண்களால் காண இயலாத ஒன்றாகும். அதனைத் தீண்டுதல் என்ற அனுபவம் மூலம் மட்டுமே அறியலாம்” என்று அந்த மதத்தினர் கூறுகிறார்கள். அதனையும் தள்ளுகிறார்.
– அதாவது, ஜ்ஞாநேந்த்ரியங்களிலே ஏதேனுமொன்றுக்கு கோசரமானபோதே ப்ரத்யக்ஷத்வம் ஸித்தமாகையாலே, த்வக் இந்த்ரியத்தாலே தோற்றுகிற வாயுவை அப்ரத்யக்ஷமென்னவொண்ணாது என்கை.
ஞான இந்த்ரியங்களில் ஏதேனும் ஒன்றால் மட்டுமே ஒரு வஸ்துவை அறிய இயலும் என்றால், ப்ரத்யக்ஷமாகப் புலப்படும் தன்மை தேறுகிறது. ஆகவே, தீண்டுதல் என்ற புலனால் அறியப்படும் வாயுவை ப்ரத்யக்ஷ ப்ரமாணத்திற்கு இலக்காகாத ஒன்றாகக் கூற இயலாது.