Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 131)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
வேறே சிலர் இதுதன்னை நித்யம் நிரவயவம் விபு அப்ரத்யக்ஷம் என்றார்கள்.
இனி, ஆகாசத்துக்கு நித்யத்வ நிரவயவத்வ விபுத்வ அப்ரத்யக்ஷத்வங்கள் கொள்ளுகிற நையாயிக வைசேஷிக மதத்தை அருளிச் செயகிறார் (வேறே சிலர்) என்று தொடங்கி.
அடுத்து ஆகாசத்திற்குக் நித்யமாக உள்ல தன்மை, அவயவம் அற்ற தன்மை, எங்கும் நிறைந்துள்ள தன்மை, கண்களால் காண இயலாத தன்மைபோன்ற பல வற்றையும் கூறுகின்ற நையாயிக வைசேஷிக மதங்களுடைய கருத்தைக் கூறுகிறார். சூர்ணை விளக்கம் - ஒரு சிலர் ஆகாயத்தை நித்யமானது, அவயவம் இல்லாதது, எங்கும் நிறைந்தது, கண்களால் காண இயலாதது என்று கூறுகிறார்கள்.