Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 129)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
சிலர் ஆவரணாபாவம் ஆகாசமென்றார்கள்.
– ப்ருதிவ்யாதி சதுஷ்டத்வோபாதி ஆகாசத்தையும் பாவ ரூப பதார்த்தமாகக் கொள்ளாதே, ஆவரணாபாவ ரூபமாகக் கொள்ளுகிற பௌத்த மதத்தை அருளிச் செய்கிறார்.
பூமி முதலான நான்கு பூதங்கள் போன்றே ஆகாசத்தையும் இருக்கின்ற ஒரு பொருளாகக் கொள்ளாமல், மறைக்கக்கூடிய பொருளாக, இல்லாத தன்மையுடன் கூடியதாகக் கொள்ளும் பௌத்த மதத்தை அருளிச்செய்கிறார்.
(சிலர் ஆவரணாபாவம் ஆகாசமென்றார்கள்) என்று. “ஆவ்ரியதே அநேந” என்கிற கரண வ்யுத்பத்தியாலே, ஆவரணங்களாவன ஸ்த்தூல பதார்த்தங்களான ப்ருதிவ்யாதிகளாய், அவற்றினுடைய அபாவமே ஆகாச சப்த வாச்யமல்லது, இது ஆகாசம் என்று காட்டலாம்படி பாவ ரூபமானதொரு பதார்த்தமன்று என்கை. “ந ச ப்ருதிவ்யாதி அபாவமாத்ரமாகாச இதி வக்தும் சக்யம்” என்றிறே பாஷ்யகாரர் அருளிச்செய்தது.
“ஆவ்ரியதே அநேந - இதனால் மறைக்கப்பட்டுள்ளது” என்பதான செயப்படுபொருளாக உள்ளதால், மறைக்கப்படும் தம்மை கொண்டவையான ஸ்தூலமான பொருள்களாக உள்ள பூமி முதலானவைகளாக, அவற்றின் இல்லாமை என்பதே ஆகாசம் என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது அல்லாமல், “இதுவே ஆகாசம்” என்று காண்பிக்கலாம்படியான இருக்கின்ற பொருள் அல்ல என்பதே அவர்களுடைய கருத்தாகும் [குறிப்பு: இங்கு ஆகாசம் என்னும் சொல்லானது, “எதுவும் இல்லாத வெற்றிடம்” என்னும் பொருளைத் தருவதாக அவர்கள் கூறுகிறார்கள்]. ஸ்ரீபாஷ்யத்தில் (2-2-23) – “ந ச ப்ருதிவ்யாதி அபாவமாத்ரமாகாச இதி வக்தும் சக்யம் - பூமி முதலானவற்றின் இல்லாமை என்பதே ஆகாசம் என்று கூற இயலாது – என பாஷ்யகாரர் அருளிச்செய்தார்.