Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 115)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
ஆகாசாதி பூதங்களுக்கு, அடைவே சப்தாதிகள் குணங்களாயிருக்கும்.
ஜ்ஞாநேந்த்ரியங்களுக்கு விஷயங்களாகச் சொல்லப்பட்ட சப்தாதிகள் ஐந்தும் ஆகாசாதிகளுக்கு ப்ரதிநியத குணங்களாயிருக்கும்படியை அருளிச்செய்கிறார்.
ஞானேந்த்ரியங்களுக்கு விஷயங்களாகக் கூறப்பட்ட சப்தம் போன்ற ஐந்தும், ஆகாசம் முதலானவற்றுக்கு, அந்தந்த குணங்களாக உள்ள விதத்தை அருளிச்செய்கிறார்.
(ஆகாசாதி பூதங்களுக்கு) இத்யாதியால். அதாவது ஆகாசகுணம் சப்தம், வாயுகுணம் ஸ்பர்சம், அக்நிகுணம் ரூபம், ஜலகுணம் ரஸம், பூகுணம் கந்தம் என்றபடி.
ஆகாசத்தின் குணம் - சப்தம், வாயுவின் குணம் - தீண்டுதல், அக்னியின் குணம் - ரூபம், நீரின் குணம் - சுவை மற்றும் பூமியின் குணம் - மணம் என்பதாகும்.