Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 113)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
பூதங்களில் ஆகாசமவகாச ஹேது; வாயு வஹநாதி ஹேது; தேஜஸ்ஸு பசநாதி ஹேது; ஜலம் ஸேசந பிண்டீகரணாதி ஹேது; ப்ருதிவி தாரணாதி ஹேது என்பர்கள்.
பூதபஞ்சகங்களுக்கும் தனித்தனியே விநியோகங்களை தர்சிப்பிக்கிறார்.
பஞ்ச பூதங்களுக்கும், அவற்றின் தனித்தனியான பயன்களைக் கூறுகிறார்.
(பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது) அதாவது ஸகல பதார்த்தங்களுக்கும் ஸ்திதி கமநாதிகளுக்கு இடங்கொடுத்துக் கொண்டிருக்கிறவிது, ஆகாசத்துக்கு விநியோகமென்கை. “அஸ்ய தேஹஸ்ய வியதோ லாகவம் ஸௌக்ஷ்ம்யமேவ ச, சப்த: ச்ரோத்ரம் பலம் ப்ரஹ்மந் ஸுஷிரத்வம் விவிக்ததா” என்று இதுக்கு அநேக விநியோகங்களுண்டாயிருக்க இதொன்றையும் அருளிச்செய்தது, இதினுடைய ப்ராதாந்யத்தைப் பற்ற, இதுதான் மற்றையவற்றுக்கும் உபலக்ஷணம். (வாயு வஹநாதி ஹேது) வஹநம் வஹிக்கை. ஆதி சப்தத்தாலே வ்யூஹந சேஷ்டாதிகளைச் சொல்லுகிறது. இதுதான் “வாயோஸ் ஸ்பர்சேந்த்ரியஞ் சேஷ்டாம் கார்க்கச்யம் ஸ்பர்சமேவ ச, வ்யூஹநம் வஹநம் தேஹஸ் ஸ்வீகரோதி ஸ்துத்தம” என்று சொல்லப்பட்டதிறே. (தேஜஸ்ஸு பசநாதி ஹேது) பசநமாவது பாகம் பண்ணுகை. ஆதி சப்தத்தாலே ஒளஷ்ண்ய ப்ரகாசாதிகளைச் சொல்லுகிறது. இதுவும், “அக்நேரௌஷ்ண்யம் ப்ரகாசத்வம் ரூபேந்த்ரியமமர்ஷணம், ஸந்தாப செளர்ய தைக்ஷ்ண்யாநி வர்ணம் பசந சக்திதாம்; ஆதத்தே ஸஹஸா தேஹஸ் ஸாஹஸஞ்ச த்விஜர்ஷப” என்று கதிதமாயிற்று. (ஜலம் ஸேசந பிண்டீகரணாதி ஹேது) ஸேசநமாவது நனைக்கை. பிண்டீகரணமாவது திரட்டுகை. ஆதி சப்தத்தாலே சைத்ய மார்தவாதிகளைச் சொல்லுகிறது. இதுவும் “அத்ப்யச் சைத்யம் ஸமாதத்தே ஸ்நிக்தத்வம ரஸநேந்த்ரியம் ப்ரஸாதம் மார்தவம் பிண்டீகரணம் க்லேதநஞ்ச வை” எனறு அபிஹிதமாயிற்று. (ப்ருதிவி தாரணாதி ஹேது, என்பர்கள்) தாரணம் தரிக்கை. ஆதி சப்தத்தாலே மூர்த்திமத்த்வ குருத்வாதிகளைச் சொல்லுகிறது. “பூமேர் கந்த குணம் க்ராணம் கரிமாணஞ்ச தாரணம், மூர்த்திமத்த்வம் ஸஹிஷ்ணுத்வம் ஸ்வீகரோதி யதாததம்” என்று இதுவும் வ்யாஹ்ருதமாயிற்று. “என்பர்கள்” என்றது, தத்வவித்துக்கள் சொல்லுவர்கள் என்றபடி.
(பூதங்களில் ஆகாசம் அவகாச ஹேது) - அனைத்து வஸ்துக்களுக்கும் இருப்பு, நகர்தல் போன்றவற்றுக்கு இடம் அளித்தல் என்பதே ஆகாயத்தின் தொழில் ஆகும். ப்ரஹ்மபுராணம் – அஸ்ய தேஹஸ்ய வியதோ லாகவம் ஸௌக்ஷ்ம்யமேவ ச, சப்த: ச்ரோத்ரம் பலம் ப்ரஹ்மந் ஸுஷிரத்வம் விவிக்ததா - நமது சரீரத்திற்கு எடை குறைவான தன்மை, நுட்பமாக உள்ள தன்மை, சப்தம் செவி மற்றும் வலிமை கொண்டதாக உள்ள தன்மை, துளைகளை உடைய தன்மை மற்றும் இடைவெளி கொண்டதாக உள்ள தன்மை ஆகிய பலவும் சரீரத்திற்கு ஆகாயத்திலிருந்து ஏற்படுகிறது - என்பதற்கு ஏற்ப, ஆகாயத்திற்குப் பல பயன்கள் உள்ளன. ஆயினும் இதற்கு அவகாசம் என்பதை மட்டுமே ஏன் அருளிச்செய்தார் என்றால், இதன் முதன்மையான தொழிலை உணர்த்தவே ஆகும். இது மற்ற பூதங்களுக்கும் பொருந்தும்; அதாவது அவை குறித்தும் கூறப்பட்டதாகிறது. (வாயு வஹநாதி ஹேது) – “வஹநம்” என்றால், “பொருளை ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்லுதல்” என்று பொருள். “வஹநாதி” என்பதில் உள்ள “ஆதி - தொடக்கமாக” என்பதன் மூலம், அடைதல் போன்றவற்றைக் கூறியது. இந்தக் கருத்தானது, “வாயோஸ் ஸ்பர்சேந்த்ரியஞ் சேஷ்டாம் கார்க்கச்யம் ஸ்பர்சமேவ ச, வ்யூஹநம் வஹநம் தேஹஸ் ஸ்வீகரோதி ஸ்துத்தம - ஸ்பர்ச இந்த்ரியம், அசைத்தல், உறுதியுடன் இருத்தல், ஸ்பர்சம், உலவுதல், எடுத்துச் செல்லுதல் போன்ற பலவற்றையும் சரீரமானது வாயுவிலிருந்து கொள்கிறது” என்று கூறப்பட்டது. (தேஜஸ்ஸு பசநாதி ஹேது) - பசநம் என்றால் சமைத்தல். இங்குள்ள “ஆதி” என்பதன் மூலம், உஷ்ணம் மற்றும் ப்ரகாசம் கூறப்பட்டது. இந்தக் கருத்தானது, “அக்நேரௌஷ்ண்யம் ப்ரகாசத்வம் ரூபேந்த்ரியமமர்ஷணம், ஸந்தாப செளர்ய தைக்ஷ்ண்யாநி வர்ணம் பசந சக்திதாம்; ஆதத்தே ஸஹஸா தேஹஸ் ஸாஹஸஞ்ச த்விஜர்ஷப - உஷ்ணமாக இருத்தல், ஒளி பொருந்தி இருத்தல், கண்கள், பொறுத்துக் கொள்ள இயலாமை, தாபம், சௌர்யம், தீக்ஷ்ண்யம், நிறம், சமைக்கும் திறன், சாகசம் ஆகியவற்றை இந்தச் சரீரமானது அக்னியிடமிருந்து பெறுகிறது”, என்று கூறப்பட்டது. (ஜலம் ஸேசந பிண்டீகரணாதி ஹேது) - ஸேசநம் என்றால் நனைத்தல் என்று பொருள்; பிண்டீகரணம் என்றால் திரட்டுதல் என்று பொருள். “ஆதி” என்பதன் மூலம் குளிர்ச்சி, மென்மை போன்றவை கூறப்பட்டது. இந்தக் கருத்தனாது, “அத்ப்யச் சைத்யம் ஸமாதத்தே ஸ்நிக்தத்வம ரஸநேந்த்ரியம் ப்ரஸாதம் மார்தவம் பிண்டீகரணம் க்லேதநஞ்ச வை - குளிர்ச்சி, மென்மை, சுவை இந்த்ரியம், தெளிவு, மெழுகு போன்ற தன்மை, திரட்டும் தன்மை, நனைக்கும் தன்மை போன்றவற்றைச் சரீரமானது நீரிலிருந்து பெறுகிறது”, எனப்பட்டது. (ப்ருதிவி தாரணாதி ஹேது, என்பர்கள்) - தாரணம் என்றால் தாங்குதல் என்று பொருள். ஆதி என்பதன் மூலம் உருவத்துடன் இருத்தல், பெரியதாக உள்ள தன்மை, பொறுமை ஆகியவை கூறப்பட்டது. இந்தக் கருத்தானது, “பூமேர் கந்த குணம் க்ராணம் கரிமாணஞ்ச தாரணம், மூர்த்திமத்த்வம் ஸஹிஷ்ணுத்வம் ஸ்வீகரோதி யதாததம் - மணம் என்ற தன்மை, மூக்கு, பெரியதாக உள்ள தன்மை, தாங்கும் தன்மை, உருவம் கொண்டிருத்தல், பொறுமை போன்றவற்றைச் சரீரமானது பூமியிலிருந்து பெறுகிறது” என்று கூறப்பட்டது. “என்பர்கள்” என்பதன் மூலம், “இப்படியாகத் தத்வங்கள் குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள்” எனப்பட்டது.