Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 108)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

அது சாஸ்த்ர விருத்தம்.

அத்தை காலாத்யயாபதேசத்தாலே தூஷிக்கிறார்.

அந்தக் கருத்தை, காலத்தில் உள்ள வேறுபாட்டின் மூலம் தள்ளுகிறார்.

(அது சாஸ்த்ர விருத்தம்) என்று. அதாவது இந்த்ரியங்களை பூதகார்யமென்று சொல்லுவது, இவற்றை ஆஹங்காரிகங்களாகச் சொல்லுகிற இதிஹாஸ புராணாதிகளுக்கு விருத்தமென்கை.

அந்தக் கருத்தானது சாஸ்த்ரங்களுக்கு முரணானது ஆகும். அதாவது, “இந்த்ரியங்கள் பூதங்களிலிருந்து உற்பத்தி ஆனவை” எனக் கூறுவது, “இந்திரியங்கள் அஹங்காரத்திலிருந்து வெளிப்பட்டவை” என்று கூறுகின்ற இதிஹாஸம் மற்றும் புராணங்களுக்கு முரணான கருத்தாகும்.