Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 107)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
சிலர், இந்த்ரியங்களிலே சிலவற்றை பூதகார்யமென்றார்கள்.
அநந்தரம் இப்படி தாமருளிச்செய்த இந்த்ரிய உத்பத்தி க்ரமத்துக்கு விரோதி பக்ஷத்தை நிரஸிக்கைக்காக அத்தையுத்க்ஷேபிக்கிறார்.
இப்படியாகத் தாம் அருளிச்செய்த இந்த்ரியங்களுடைய உற்பத்தி வரிசைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களுடைய வாதங்களைத் தள்ளுவதற்காக, அவற்றை உரைக்கிறார்.
(சிலர், இந்த்ரியங்களிலே சிலவற்றை பூதகார்யமென்றார்கள்) என்று. அவர்களாகிறார் க்ராணாதிகளான இந்த்ரியங்களை ப்ருதிவ்யாதி பூதகார்யமாகவே கொள்ளும் நையாயிகாதிகள். அவர்கள் தாம் ஆநுமாநிகராகையாலே அநுமாநத்தாலேயிறே அர்த்தத்தை ஸாதிப்பது.
இந்த்ரியங்களில் சிலவற்றை பூதங்களிலிருந்து உற்பத்தி ஆனவை என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். அவர்கள் யார் என்றால், நாக்கு தொடக்கமாக உள்ள இந்த்ரியங்க்ளை, பூமி தொடக்கமாக உள்ள பூதங்களுடைய கார்யங்கள் என்று கூறுகின்ற நையாயிகர்கள் ஆவர். அவர்கள் ஆநுமாநிகர்கள் என்பதால், அனுமானத்தை மட்டுமே கொண்டு தங்கள் கருத்தை நிலைநாட்டுகிறார்கள்.