Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 105)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
மற்றை இரண்டஹங்காரமும் ஸ்வகார்யங்களைப் பிறப்பிக்கும்போது, ராஜஸாஹங்காரம் ஸஹகாரியாயிருக்கும்.
இனி, ராஜஸ அஹங்காரத்தினுடைய கார்யம் சொல்லுகிறது (மற்றையிரண்டு அஹங்காரமும் என்று தொடங்கி).
அடுத்து ராஜஸ் அஹங்காரத்தின் கார்யம் கூறப்படுகிறது.
அதாவது ஸாத்விக தாமஸ அஹங்காரங்களிரண்டும் ஸ்வகார்யங்களை உத்பாதிக்கும்போது, பீஜத்தினுடைய அங்குரத்துக்கு ஜலம் போலவும், அக்நியினுடைய ஜ்வலநத்துக்கு வாயு போலவும், ராஜஸ அஹங்காரம் ஸஹகாரியாயிருக்குமென்கை. இது ஸஹகரிக்கையாவது “ரஜ: ப்ரவர்த்தகம் தத்ர” என்கிறபடியே, இவற்றில் இந்திரிய ஹேதுவான ஸத்வ அம்சத்துக்கும் பூதஹேதுவான தமோம்சத்துக்கும் சல ஸ்வபாவமான ரஜஸ்ஸு ப்ரேரகமாய்க் கொண்டு ப்ரவர்த்திப்பிக்கை.
ஸாத்விகம் மற்றும் தாமஸம் ஆகிய இரண்டு அஹங்காரங்களும் தங்கள் தங்கள் மாற்றங்களை உண்டாக்கும்போது, விதையினுடைய முளைக்கு நீர் போன்றும், அக்னியின் ஜ்வாலைக்குக் காற்று போன்றும், ராஜஸ அஹங்காரம் அவற்றுக்குத் துணையாக உள்ளது. இது எப்படி உதவுகிறது என்றால், “ரஜ: ப்ரவர்த்தகம் தத்ர - அவற்றை ராஜஸம் ஈடுபட வைக்கிறது” என்பதற்கு ஏற்ப, இந்த இரண்டில் இந்த்ரியங்களுக்குக் காரணமாக உள்ள ஸத்வ அம்சத்திற்கும், பூதங்களுக்குக் காரணமாக உள்ள தாமஸ அம்ஸத்திற்கும், அசைவதையே இயல்பாகக் கொண்ட ராஜஸ அம்சமானது தூண்டுகோலாக நின்று, அந்தந்த செயல்களில் ஈடுபட வைக்கிறது.