Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 100)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

அஹங்காரம் அபிமாந ஹேதுவாயிருக்கும்.

– அதாவது, தேஹாத்மாபிமாநாதிகளை ஜநிப்பிக்கை. இத்தால் இதினுடைய க்ருத்யம் சொல்லப்பட்டது.

“இந்தச் சரீரமே ஆத்மா” என்ற எண்ணத்தை அஹங்காரம் ஏற்படுத்துகிறது. இதன் மூலம் அஹங்காரத்தின் செயல்பாடு கூறப்பட்டது.