Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 99)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இதில் நின்றும் வைகாரிகம், தைஜஸம், பூதாதியென்று த்ரிவிதமான அஹங்காரம் பிறக்கும்.
இனி, மற்றுமுண்டான விகாரங்களும் க்ரமத்திலே சொல்லப்படுகிறது.
அடுத்து ப்ரக்ருதியில் ஏற்படும் வேறு மாற்றங்கள் குறித்துக் கூறப்பட உள்ளன.
– அதாவது, இந்த மஹானில் நின்றும், “வைகாரிகஸ் தைஜஸச்ச பூதாதிச்சைவ தாமஸ:, த்ரிவிதோயமஹங்காரோ மஹத் தத்வாத ஜாயத” என்கிறபடியே, ஸாத்விக ராஜஸ தாமஸ ரூப பேதத்தாலே வைகாரிகமென்றும், தைஜஸமென்றும், பூதாதியென்றும் த்ரிவிதமான அஹங்காரமும் பிறக்குமென்கை. இத்தால், த்ரிகுணாத்மிகையான மூலப்ரக்ருதியில் நின்றும் பிறந்ததாகையாலே, மஹானும் த்ரிகுணாத்மகமாயிருக்கும்; அப்படியே த்ரிகுணாத்மகமான மஹானில் நின்றும் பிறந்ததாகையாலே, அஹங்காரமும் த்ரிகுணமாயிருக்கும் என்கை.
இந்த மஹான் தத்வத்திலிருந்து, ஸ்ரீவிபு (1-2-37) - வைகாரிகஸ் தைஜஸச்ச பூதாதிச்சைவ தாமஸ:, த்ரிவிதோயமஹங்காரோ மஹத் தத்வாத ஜாயத - வைகாரிகமானது ஸாத்விக அஹங்காரம், ராஜஸ அஹங்காரம் மற்றும் தாமஸ அஹங்காரம் என மூன்றுவிதமாக உள்ளது. இவை மஹத் தத்வத்திலிருந்து வெளிப்படுகின்றன - என்பதற்கு ஏற்ப ஸாத்விகம், ராஜஸம் மற்றும் தாமஸம் ஆகிய வேறு பெயர்கள் கொண்ட வைகாரிகம், தைஜஸம் மற்றும் பூதாதி ஆகிய மூன்றுவிதமான அஹங்காரங்கள் பிறக்கின்றன. ஆகவே, மூன்று குணங்களுடன் கூடியதான ப்ரக்ருதியிலிருந்து வெளிப்பட்ட காரணத்தால், மஹத் தத்வமும் மூன்று குணங்களுடன் கூடியதாக இருக்கும்; மூன்று குணங்கள் கொண்ட மஹத்திலிருந்து வெளிப்பட்டதால், அஹங்காரமும் மூன்று குணங்களுடன் இருக்கும் என்றாகிறது.