Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 94)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
ரஐஸ்ஸு - ராக த்ருஷ்ணா ஸங்கங்களையும் கர்ம ஸங்கத்தையும் பிறப்பிக்கும்.
– “ரஜோ ராகாத்மகம் விததி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் தந்நிபதநாதி கௌந்தேய கர்ம ஸங்கேந தேஹிநாம்” என்னக் கடவதிறே. ராகமாவது, யோஷித் புருஷர்களுக்கு அந்யோந்யமுண்டான ஸ்ப்ருஹை. த்ருஷ்ணையாவது, சப்தாதி ஸர்வ விஷய ஸ்ப்ருஹை. ஸங்கமாவது, புத்ர மித்ராதிகளளவில் ஸம்ச்லேஷ ஸ்ப்ருஹை. கர்ம ஸங்கமாவது, க்ரியைகளில் ஸ்ப்ருஹை.
கீதையில் (14-7) - ரஜோ ராகாத்மகம் விததி த்ருஷ்ணா ஸங்க ஸமுத்பவம் தந்நிபதநாதி கௌந்தேய கர்ம ஸங்கேந தேஹிநாம் - விருப்பம் என்பதே வடிவமாக உள்ள ரஜோ குணமானது, கர்மம் மற்றும் பற்றுதல் ஏற்படக் காரணமாக உள்ளது. இது கர்மங்களிலும், கர்ம பலன்களிலும் உள்ள ஸம்பந்தம் காரணமாகக் கட்டுப்படுத்துகிறது. ராகம் என்பது ஆண்-பெண் இடையே உண்டாகின்ற காமம் ஆகும். த்ருஷ்ணை என்றால், ஓசை முதலான இந்த்ரிய விஷயங்கள் மீது ஏற்படும் விருப்பம் ஆகும். ஸங்கம் என்பது புத்திரன், நண்பன் போன்றவர்கள் மீது கொள்ளும் விருப்பம் ஆகும். கர்மஸங்கம் என்றால், செயல்களில் உள்ள விருப்பம் ஆகும்.