Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 93)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ஸத்வம் – ஜ்ஞாந ஸுகங்களையும் உபயஸங்கத்தையும் பிறப்பிக்கும்.

– விகார தசையில் இவைதான் கார்யைக நிரூபணீயங்களாகையாலே, கார்யகதநமுகத்தாலே இவற்றினுடைய ஸ்வரூபங்களை தர்சிப்பிக்கிறார்.

மாற்றங்கள் அடைந்த நிலையில் கார்யங்களைக் கொண்டு மட்டுமே இந்தக் குணங்களை நிரூபிக்கவேண்டும் என்ற நிலை உள்ளதால், கார்யங்கள் குறித்து உரைக்கும்போது இவற்றின் ஸ்வரூபத்தையும் அருளிச்செய்கிறார்.

– அதாவது, ஸத்வகுணம் நிர்மலமாகையாலே, ஜ்ஞாந ஸுகாவரண மன்றிக்கே அவற்றுக்கு ஜநகமுமாய், அவற்றினுடைய பேற்றுக்கு ப்ரவர்த்திக்கும்படி அவையிரண்டிலும் ஸங்கத்தையுமுண்டாக்குமென்கை. “தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகமநாமயம், ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக” என்னக்கடவதிறே.

ஸத்வகுணமானது எந்தவிதமான தோஷங்களும் அற்றதாக உள்ளதால், ஞானம் மற்றும் ஸுகம் ஆகியவற்றை மூடாமல், அவற்றுக்குப் பிறப்பிடமாகவும், அவற்றை அடைவதற்கு ஒருவனை முயற்சி செய்யும்படியாக அவற்றின் மீது பற்றுதலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. கீதையில் (14-6) - தத்ர ஸத்வம் நிர்மலத்வாத் ப்ரகாசகமநாமயம், ஸுக ஸங்கேந பத்நாதி ஜ்ஞாந ஸங்கேந சாநக – அந்த மூன்று குணங்களில் ஸத்வமான தூய்மையானதாக உள்ளதால் ஒளிர்ந்தபடி இருக்கிறது, மாற்றங்கள் அடையாதது; ஆனால் அது இன்பத்துடன் கொண்ட ஸம்பந்தம் மற்றும் ஞானத்துடன் கொண்ட ஸம்பந்தம் காரணமாக கட்டுப்படும்படிச் செய்கிறது - என்றது காண்க.