Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 91)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
குணங்களாகிறன - ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள்.
அப்படியிருக்கிற குணங்கள்தானெவை என்னும் ஆகாங்க்ஷையிலே (குணங்களாகிறன - ஸத்வ ரஜஸ் தமஸ்ஸுக்கள்) என்கிறார்.
அப்படிப்பட்ட குணங்கள் எவை என்ற கேள்விக்கு விடை அளிக்கிறார்.
இவைதானிருக்கும்படி எங்ஙனே என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் (இவை ப்ரக்ருதிக்கு) என்று தொடங்கி.
இவை எப்படிப்பட்டவை அல்லது எவ்விதம் உள்ளன என்று சந்தேகத்திற்கு விடை அருளிச்செய்கிறார்.