Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 90)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

இதில் நின்றும் குண வைஷம்யத்தாலே மஹதாதி விகாரங்கள் பிறக்கும்.

இனி இந்த ப்ரக்ருதியில் நின்றும மஹதாதி விகாரங்கள் ஜநிக்கைக்கு மூலம் இன்னதென்கிறார்.

அடுத்து ப்ரக்ருதியிலிருந்து மஹத் போன்ற மாற்றங்கள் பிறப்பதற்கான காரணத்தைக் கூறுகிறார்.

(இதில் நின்றும் குண வைஷம்யத்தாலே மஹதாதி விகாரங்கள் பிறக்கும்) என்று. குணங்களுக்கு வைஷம்யமாவது, பரஸ்பர உத்ரேகம்.

குணங்களுக்கு வைஷம்யம் என்றால், ஒன்றுக்கொன்று ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நிலையாகும்.