Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 89)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

இது அவிபக்த தமஸ்ஸென்றும், விபக்த தமஸ்ஸென்றும், அக்ஷரமென்றும் சில அவஸ்த்தைகளை யுடைத்தாயிருக்கும்.

இப்படி ப்ரதம தத்வமான ப்ரகருதிக்குண்டான அவஸ்தா விசேஷங்களை அருளிச்செய்கிறார் (இது அவிபக்த தமஸ்ஸு) என்று தொடங்கி.

இவ்விதம் முதன்மையாக உள்ளதான ப்ரக்ருதிக்கு இருக்கின்ற பல்வேறு பரிணாம நிலைகளுடைய சிறப்புகளை அடுத்து அருளிச்செய்கிறார்.

– அதாவது, “அவ்யக்தமக்ஷரே லீயதே, அக்ஷரம் தமஸி லீயதே, தம: பரே தேவ ஏகீ பவதி” என்கிறபடியே, ஸம்ஹ்ருதி ஸமயத்தில் அவ்யக்தாவஸ்தை குலைந்து அக்ஷராவஸ்தமாய். அது தானும் குலைந்து அதிஸூக்ஷ்மமாய தமச்சப்த வாச்யமாய அது தானும் நாம ரூப விபாக அநந்ஹமாம்படி ஸர்வேச்வரன் பக்கலிலே ஏகீபவித்து நிற்கையாலே அவிபக்த தமஸ்ஸென்றும்; ஸர்ககாலம் வந்தவாறே “ப்ராதுராஸீத் தமோநுத:” என்கிறபடியே, அவனாலே ப்ரேரிதமாய்க் கொண்டு நாம ரூப விபாக யோக்யமாம்படி அவன் பக்கல நின்றும விபக்தமாய், கார்யோந்முகமாகையாலே விபக்த தமஸ்ஸென்றும்; அநந்தரம் தத் ஸங்கல்ப விசேஷத்தாலே புருஷ ஸமஷ்டி கர்ப்பமான அசேதநமென்று விவேகிக்கைக்கும் அபதமாம்படியான தமோவஸ்தை குலைந்து புருஷ ஸமஷ்டி கர்ப்பத்வம் தோன்றும்படியான அவஸ்தையை ப்ராபித்து நிற்கையாலே அக்ஷரமென்றும், இங்ஙனே சில அவஸ்தைகளை உடைத்தாயிருக்குமென்கை. ஆகையால் இது அவிபக்த தமஸ்ஸாகையாவது, அவ்யக்த அக்ஷராவஸ்தைகள் குலைந்து, தமச்சப்த வாச்யமாய், நாம ரூப விபாக அநந்ஹமாம்படி ஸர்வேச்வரன் பக்கலிலே ஏகீபவித்து நிற்கை. விபக்த தமஸ்ஸாவது, நாம ரூப விபாக அர்ஹமாம்படி விபக்தமாய், கார்யோந்முகமாகை. அக்ஷரமாகையாவது, இது அசித்தென்றும், இதினுள்ளே புருஷ ஸமஷ்டி கிடக்கிறதென்றும் விவேகிக்கவொண்ணாதபடி அதிஸுக்ஷ்மமாயிருக்கிற தமோவஸ்தை குலைந்து, புருஷ ஸமஷ்டி கர்ப்பத்வம் தோன்றும்படியான அவஸ்தையை பஜிக்கை என்றதாயிற்று. – குண த்ரய வைஷம்யஸ்யாநந்தர பூர்வ அவஸ்தா குணஸாம்யம், குண ஸாம்ய லக்ஷணம் அவ்யக்தம், (“அவ்யக்தம் அக்ஷரே லீயதே” இதி) யஸ்யாம் அவஸ்தாயாம் குண ஸாம்யமப்யஸ்புடம், தத் அவஸ்தம் சேதந ஸமஷ்டி கர்ப்பம் தத் அக்ஷர சப்தேந உச்யதே. நது சேதந மாத்ரம், தஸ்ய அவ்யக்த ப்ரக்ருதித்வ தமோ விக்ருதித்வ அயோகாத். அதஸஸ் ஸர்வம் தத்வ ஜாதம் சித் அசித் ஆத்மகம் மந்தவ்யம். “ப்ரதாநாதி விசேஷாந்தம் சேதந அசேதந ஆத்மகம்” இதி பராசர வசநாத். அத்ர து சித்கர்ப்பே வஸ்துநி அக்ஷர சப்த உபசரித:, ப்ரயோகேந்யதாஸித்தே சக்தி அந்தர கல்பநாயோகாத். (“அக்ஷரம் தமஸி லீயதே” இதி) சித் கர்ப்பத்வம் அசித்வம் அபி யத்ர விவேகதும் அசக்யம் தத் அவஸ்தத் அதிஸூக்ஷ்மம் ப்ரதாநம் தமச் சப்தேந அபிலப்யம். அக்ஷராதி அவஸ்தா ப்ராப்த்யௌந்முக்க்ய விசிஷ்டம் ததேவ விபக்தம் தம: ததௌந்முக்க்யரஹிதம் அவிபக்தம் தம: பரமாத்ம சரீரதயாபி சிந்தயிதும் அசக்யம். ஸலில விலீந லவண சந்தரகாந்தஸ்த ஸலில ஸூர்யகாந்தஸ்தவஹ்நி கல்பம் ஸர்வஜ்ஞ பரமாத்மைக வேத்யம் அவதிஷ்டதே. பூதல விநிஹித பீஜஸ்தாநீயமவிபக்தம் தம:, ம்ருந்நிஸ்ஸ்ருத பீஜவத் விபக்தம் தம:, ஸலில ஸம்ஸ்ருஷ்டார்த்ரசதில அவயவ பீஜ துல்யம் அக்ஷரம், உச்சூந பீஜ ஸமாநம் அவ்யக்தம், அங்குர ஸ்தாநீயோ மஹாந் இதி விவேக: - என்று ஸுபாலோபநிஷத் வ்யாக்யாநத்தில் ச்ருதப்ரகாசிகாகாரர், இதினுடைய அவஸ்தா விசேஷங்களை ஸுஸ்பஷ்டமாக அருளிச் செய்தார். இத்தால் அக்ஷரமும் தமஸ்ஸும், குஸுமத்தினுடைய முகுள கோரக அவஸ்தைகள்போலே இதினுடைய ஸங்கோச தசையாகையாலே, மஹதாதிகளைப் போலே தத்வாந்தரமன்றென்னுமிடம் ஸித்தம்.

ஸுபால உபநிஷத் (2) - அவ்யக்தம் அக்ஷரே லீயதே | அக்ஷரம் தமஸி லீயதே | தம: பரே தேவ ஏகீபவதி – அவ்யக்தம் அக்ஷரத்திலும், அக்ஷரம் தமஸ்ஸிலும் லயிக்கின்றன. தமஸ் உயர்ந்த தேவனிடமும் சென்று ஒன்றாகிறது – என்பதற்கு ஏற்ப, ப்ரளய காலத்தில் அவ்யக்த நிலையானது குலைந்து, அக்ஷர நிலையை அடைகிறது; அதன் பின்னர் அக்ஷர நிலையும் குலைந்து, மிகவும் ஸுக்ஷ்மமான நிலையை அடைகிறது; அந்தக் கட்டத்தில் தமஸ் என்ற பெயர் பெறுகிறது; அத்தகைய தமஸ்ஸானது பெயர் மற்றும் ரூபம் என்று பிரித்து அறிவதற்கான தகுதி அற்றதாக, ஸர்வேச்வரனிடம் சென்று ஒடுங்குகிறது; இதனால் அது “அவிபக்த தமஸ்” என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் ஸ்ருஷ்டி காலம் வந்தவுடன், மநு. (1-6) – ப்ராதுராஸீத் தமோநுத: - இருளை விரட்டும்விதமாக வெளிப்படுத்தினான் - என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனால் தூண்டப்பட்டு பெயர் மற்றும் ரூபம் கொண்டு பிரித்து அறிவதற்கான தகுதி கொண்டதாக, ஸர்வேச்வரனிடமிருந்து தனியாக நின்று, கார்யங்கள் உற்பத்தி ஆவதற்கு ஏற்றபடி உள்ளதால், “விபக்த தமஸ்” என்று கூறப்படுகிறது. அதன் பின்னர் ஸர்வேச்வரனுடைய ஸங்கல்பத்திற்கு உள்ள சிறப்பு காரணமாக, ஆத்மாக்களும் ப்ரக்ருதியும் இணைந்து, கர்ப்பம் அடைந்த பயிர்கள் நிலையை அடைகிறது; அதனால் அக்ஷரம் எனப்படுகிறது. இப்படியாக சில நிலைகளுடன் கூடியதாக உள்ளது. எனவே ப்ரக்ருதியானது அவிபக்த தமஸ் என உள்ளது ஏனென்றால், அவ்யக்தம் மற்றும் அக்ஷரம் என்பதான நிலைகள் மாற்றம் அடைந்து “தமஸ்” என்று அழைக்கப்படுவதாக, பெயர் மற்றும் ரூபம் பிரித்து அறியலாம்படி தகுதி இன்றி, ஸர்வேச்வரனிடம் ஒடுங்கி நிற்பதால் ஆகும். இது விபக்த தமஸ் என உள்ளது ஏனென்றால், பெயர் மற்றும் ரூபம் என்று பிரித்து அறியத் தகுதி கொண்டதாக, கார்யங்கள் தோன்றுபடியாக இருப்பதால் ஆகும். ப்ரக்ருதியானது, அசித் என்றும், இதற்குள் அனைத்து ஜீவாத்மாக்களும் தொகுத்த நிலையில் உள்ளனர் என்றும் பிரித்து அறியாதபடி, மிகவும் ஸூக்ஷ்மமான தமஸ் நிலையானது மாறி, ஜீவாத்மாக்களுடைய தொகுப்பு நிலை கர்ப்பம் என்பது வெளிப்படும்படியான நிலையை அடைவதால் அக்ஷரம் எனப்படுகிறது. ஸுபால உபநிஷத் வ்யாக்யானத்தில் ச்ருதப்ரகாசிகாகாரர்: ப்ரக்ருதியானது மூன்று குணங்களுடைய ஏற்றத்தாழ்வை அடைகிறது; அந்த நிலைக்குப் பின்னர், முந்தைய நிலையானது சமநிலை எனப்படுகிறது. குணங்கள் சமமாக உள்ள நிலையானது, கண்களுக்குப் புலப்படாத அவ்யக்தம் எனப்படும். எந்த ஒரு நிலையில் அனைத்து குணங்களும் சமமாகவோ அல்லது ஏற்றத்தாழ்வுடன் கூடியதாக வெளிப்படையாகவோ காண இயலாமல் உள்ளதோ, அப்படிப்பட்ட நிலையை அடைந்துள்ளதான தொகுத்த ஜீவாத்ம கூட்டம் எதில் அடங்கியுள்ளதோ, அது அக்ஷரம் எனப்படும்; இது ஏனென்றால், அக்ஷரம் என்பது ஜீவாத்மாக்களை மட்டுமே குறிப்பதல்ல; காரணம், அதற்கு ப்ரக்ருதியானது காரணமாகவும், அது தமஸ்ஸுக்குக் கார்யமாகவும் உண்டானது அல்ல என்பதால் ஆகும். ஆகவே ப்ரக்ருதி தத்வம் முதலாக, இந்தப் பூமி முடிய உள்ள அனைத்தும் சித் மற்றும் அசித் என்ற ஸ்வரூபங்களாகவே எண்ணப்படவேண்டும். பராசரர் - ப்ரதாநாதி விசேஷாந்தம் சேதந அசேதந ஆத்மகம் - ப்ரதானம் தொடக்கமாக விசேஷமான பொருள்கள் முடிய உள்ள அனைத்தும் சேதனம் மற்றும் அசேதனம் என்பவற்றை உள்ளடக்கியதாகவே உள்ளன - என்றார். இங்கு “ஜீவர்கள் அனைவரும் ப்ரக்ருதியில் உள்ள நிலையானது, சூல் கொண்ட பயிர்கள் போன்று உள்ளனர்” என்பதைக் குறிக்கும் சொல்லானது உபசாரமாக மட்டுமே கூறப்பட்டது; இதற்கு வேறுவிதமாகப் பொருள் ஏற்கக்கூடாது. இவ்விதமாக சித் வஸ்துக்களைக் கர்ப்பத்தில் கொண்டதாக உள்ள நிலையும், அசித் வஸ்துக்களுடைய தன்மையும், எந்த ஒரு நிலையில் பிரித்து அறிய முடியாதபடி உள்ளதோ அப்படிப்பட்ட ஸூக்ஷ்மமான நிலையானது, ப்ரதானம் மற்றும் தமஸ் போன்ற சொற்களால் கூறப்படுகிறது. இப்படிப்பட்ட அக்ஷர நிலையை அடைவதற்கான எதிர்த்தன்மையுடன் கூடியுள்ளது “விபக்த தமஸ்” எனப்படும்; இவ்விதம் எதிர்த்தட்டாக இல்லாதது “அவிபக்த தமஸ்” எனப்படும். அது பரமாத்மாவின் சரீரம் என்று பிரித்து அறிய இயலாதபடியும், நீரில் கலந்துள்ள உப்பு, சந்த்ரகாந்தக் கல்லில் உள்ள நீர், சூரியகாந்தக் கல்லில் உள்ள நெருப்பு போன்றதாகவும், அனைத்தும் அறிந்த பரமாத்மாவால் மட்டுமே அறியக்கூடியதாகவும் உள்ளது. பூமியில் விதைக்கப்பட்ட விதை போன்றதே அவிபக்த தமஸ் ஆகும்; நீருடன் ஒன்றாகக் கலந்து சிதைவுடன் கூடிய விதை போன்றதே அக்ஷரம் ஆகும்; அந்த விதையிலிருந்து வெளிவந்த முளையைப் போன்றதே மஹாந் ஆகும் - என்று கூறினார். இதன் மூலம் அக்ஷரம் மற்றும் தமஸ் ஆகியவை, ஒரு மலருடைய மொட்டு மற்றும் அரும்பு முதலான நிலைகளைப் போன்று, ப்ரக்ருதியின் சுருங்கிய நிலையாகிறது; ஆகவே இவை மஹாந், அஹங்காரம் என்பது போன்று வேறு தத்வங்கள் அல்ல என்று தேறுகிறது.