Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 83)

இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்

ஆத்மாவிலும் ஜ்ஞாநத்திலும் பிந்நமானபடியென் னென்னில்;

– கீழே, ஆத்மாவும் அஜடமாய், ஜ்ஞாநமும் அஜடமாயிருக்கச் செய்தே, அந்யோந்யம் பின்னமென்னுமித்தை தர்சிப்பித்தாப்போலே சுத்தஸத்வமும் அஜடமாயிருக்கச்செய்தே, இவையிரண்டிலும் பின்னமாயிருக்கும்படியை தர்சிப்பிக்கைக்காக தஜ்ஜிஜ்ஞாஸு ப்ரச்நத்தை அநுவதிக்கிறார்.

ஆத்மாவும் அஜடமாகவும், தர்மபூதஞானமும் அஜடமாகவும் இருந்தபோதிலும், இவை ஒன்றுக்கொன்று தனித்தனியாக உள்ளதை மேலே உரைத்தார். இதனைப் போன்றே, சுத்தஸத்வமானது அஜடமாக உள்ளபோதிலும், இதுவும் ஞானம் மற்றும் ஆத்மா ஆகியவையும் தனித்தனியாக உள்ள விதத்தைக் காண்பிப்பதற்காக இதனைக் குறித்து அறிந்து கொள்ள விரும்புபவர்கள் எழுப்பக்கூடிய வினாவை இங்கு தானாகவே எழுப்புகிறார்.

(ஆத்மாவிலும் ஜ்ஞாநத்திலும் பின்னமானபடியென்? என்னில்) என்று.

சுத்தஸத்வமானது, ஆத்மா மற்றும் ஞானம் ஆகியவற்றைக் காட்டிலும் எவ்விதம் வேறுபட்டது என்றால்… (அடுத்த சூர்ணையில் தொடர்கிறார்).