Tattva Trayam - இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம் (சூர்ணை 80)
இரண்டாம் ப்ரகரணம் – அசித் ப்ரகரணம்
இத்தைச் சிலர் ஜடமென்றார்கள், சிலர் அஜடமென்றார்கள்.
(இத்தைச் சிலர் ஜடமென்றார்கள், சிலர் அஜடமென்றார்கள்) அதாவது, இந்த சுத்தஸத்வம் தனனை இந்த தர்சநஸ்தர் தங்களிலே சிலர் ஜடமென்று சொன்னார்கள். அங்ஙனன்றிக்கே சிலர் அஜடமென்று சொன்னார்கள் என்கை. “இஹ ஜடாமாதிமாம் கேசிதாஹு:” என்றிறே அபியுக்தரும் சொல்லிற்று.
இத்தகைய சுத்த ஸத்வத்தை, ஸ்ரீவைஷ்ணவ தர்சனத்தை ஏற்கும் சிலர் “ஜடம்” என்றார்கள். அவ்விதம் அல்லாமல் ஒரு சிலர் “அஜடம்” என்றனர். தத்வமுக்தகலாபத்தில் - இஹ ஜடாமாதிமாம் கேசிதாஹு: - முதலாவதாக சுத்தஸத்வத்தை ஜடம் என்று சிலர் கூறுகிறார்கள் – என்று வேதாந்த தேசிகன் உரைத்தார்.